Gardening Tips : வீட்டில் தோட்டம் வளர்த்து வருகிறீர்களா? இந்த தவறுகளை மட்டும் தெரியாமல் கூட செய்யாதீர்கள்!
Gardening Tips : வீட்டில் தோட்டம் வளர்த்து வருகிறீர்களா? இந்த தவறுகளை மட்டும் தெரியாமல் கூட செய்துவிடாதீர்கள். அது உங்கள் தோட்டத்தை கடுமையாக பாதிக்கும்.
வீட்டில் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள் இவைதான். அவற்றை நீங்கள் தவிர்க்கும் வழிகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தோட்டம் வளர்க்கும்போது செய்யும் தவறுகள்
வீட்டில் தோட்டம் வளர்க்கும் பழக்கத்தை அதிகம் பேர் இப்போது செய்து வருகிறார்கள். நிறைய பேருக்கு அது இப்போது ஹாபியாக உள்ளது. இது ஒரு சிகிச்சை முறையாகவும், வெகுமதியளிக்கும் ஒன்றாகவும் இருக்கும். இதன் பலன்கள், உங்கள் வீட்டில் நறுமணம் பரவும். நீங்கள் புதிதாக தோட்டம் வளர்க்க துவங்கியுள்ளவர் என்றால், இதோ உங்களுக்கு வழிகாட்டும் வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அதிக தண்ணீர்
வீட்டில் முதன் முறையாக தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் செய்யும் முதல் தவறு தாவரங்களுக்கு அதிகம் தண்ணீர் விடுவதுதான். நீங்கள் தாவரங்களுக்கு தேவைக்கு அதிகமான தண்ணீரை ஊற்றினால், அதன் வேர்கள் அழுகிவிடும்.
இலைகள் தொங்கிவிடும். எனவே உங்கள் செடிகளுக்கு தேவையான அளவு மட்டும் தண்ணீர் விடுவதை உறுதிசெய்யுங்கள். அதிக தண்ணீர் விட்டுவிடாதீர்கள். தொட்டியின் மேலே உள்ள மண் காய்ந்துள்ளதா என்பதை தொட்டுப்பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும்.
தாறுமாறாக செடிகளை நடுவது
நீங்கள் தோட்டம் அமைப்பதற்கு புதியவர் என்றால் நீங்கள் செய்யும் அடுத்த தவறு, தாவரங்களை தாறுமாறாக எங்கு வேண்டுமானாலும் நடுவதுதான். ஒவ்வொரு செடிக்கும் தேவையான அளவு இடைவெளி மற்றும் சூரிய ஒளி தேவை.
அது அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ அது உங்கள் தாவரத்தை பாதிக்கும். எனவே உங்கள் தாவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்ப தண்ணீர் மற்றும் இடம் கொடுங்கள். தேவைப்பட்டால் நீங்கள் தாவரங்கள் வாங்கும் நபரிடம் இருந்து அறிவுரையைப் பெறுங்கள்.
வளமான மண் கிடைக்கவில்லையா?
உங்கள் தாவரங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுப்பதுபோல், பல்வேறு வகை தாவரங்களுக்கு பல வகை மண்ணும் தேவைப்படுகிறது. இதற்கு நீங்கள் மண்ணுடன், அதுவும் தோட்டம் அமைக்க தேவைப்படும் மண்ணாக அது இருக்கவேண்டும்.
அதனுடன், வேப்பம் புண்ணாக்கு, தேங்காய் நார், மண்புழு உரம் போன்றவற்றை கலந்து தோட்டம் மற்றும் தொட்டிகளுக்கு தேவையான மண்ணை உருவாக்க வேண்டும். அந்த மண்ணை எப்படி கலக்கவேண்டும் என்ற அறிவுரையை நீங்கள் நிபுணர்களிடம் இருந்து பெறலாம்.
அதிக உரம்
நீங்கள் தோட்டம் அமைக்க துவங்கும் காலத்தில், உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் இல்லை ஒன்றுமே தெரியாது என்ற எண்ணமும் தோன்றும். தாவரங்களுக்கு உரங்கள் இடவேண்டும். கம்போஸ்ட் உரங்கள் போடவேண்டும்.
அது தாவரங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும். ஆனால், உங்கள் தாவரங்களுக்கு அதிக உரங்கள் இட்டால், தாவரத்தில் ஊட்டச்சத்துக்கள் சமமின்மை ஏற்பட்டு, உங்களின் வேர்கள் கருகிவிடும், அதிக இலைகள் தோன்றி செடியை நாசமாக்கிவிடும்.
பூச்சிக் கட்டுப்பாடு செய்யாமல் விடுவது
உங்கள் வீட்டின் தோட்டத்தில் வளரும் தாவரங்களை பூச்சிகள் தாக்கிவிடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம். அவை பூச்சி தாக்குதலுக்கு ஆளானால், அது விரைவில் சேதமடைந்துவிடும். நீங்கள் சாப்பிடும் தாவர வகை என்றால், அதற்கு பூச்சி கட்டுப்படுத்தும் மருந்துகளை வேரில் இருந்து கொடுக்கவேணடும்.
பூச்சிகள் எந்த வகை தாவரத்தை வேண்டுமானாலும் தாக்கும். எனவே ஒன்று அல்லது இரண்டு மாத இடைவெளியில் நீங்கள் தாவரங்களுக்கு வேப்ப எண்ணெய் கரைசலை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்துவிடவேண்டும். எனவே அதை கட்டாயம் செய்துவிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
அருகருகே செடிகள்
உங்கள் வீட்டில் தோட்டம் என்றாலே அல்லது தொட்டியில் என்றாலோ செடிகளை, ஒன்றுக்கு அருகில் ஒன்று என வைக்கக்கூடாது. ஒவ்வொரு தொட்டிக்கும் போதிய இடைவெளி கொடுக்கவேண்டும். புதினாவை, செம்பருத்திக்கு அருகில் வைக்கக்கூடாது. புதினா படர்ந்து வளரும் ஒரு தாவரம் ஆகும். அது அருகில் உள்ள தாவரங்களுக்கு போதிய ஊட்ட்ச்சத்துக்கள் கிடைக்கவிடாமல் செய்துவிடும். எனவே ஒவ்வொரு தாவரத்துக்கும் போதிய இடைவெளி கொடுக்கவேண்டும். மேலும் ஒவ்வொரு தாவரத்துக்கும் அருகில் என்ன தாவரங்கள் நடுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
வெட்டுவது
தாவரங்கள் அடர்ந்து வளரும்போது, அதை சரியாக வெட்டி வளர்க்கவேண்டும். நீங்கள் அவற்றை டிரிம் செய்யும்போது, மீண்டும் இலைகளும், பூக்களும் வளராது என்ற எண்ணம் தோன்றும். இதை நீங்கள் டிரிம் செய்யாவிட்டால், தாவரங்கள் அதிகம் வளர்ந்துவிடும், அவை பலவீனமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் வளர்வதற்கு காரணமாகிவிடும்.
பருவநிலைக்கு ஏற்ப தாவரங்களை நடவேண்டும்
பூச்செடிகள் அல்லது மூலிகைச் செடிகள் என எந்தச் செடியை நாட்டாலும் சரியான காலநிலையில் அவற்றை நடவேண்டும். தக்காளியை நீங்கள் பனிக்காலத்தில் நடக்கூடாது. அது ஒன்றையும் தராது. உங்களின் தாவரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே வானிலைக்கு ஏற்ற விதைகள் விதைக்கப்படவேண்டும். இவற்றைப் பின்பற்றி, நீங்கள் தோட்டம் அமைத்து மகிழ்ந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்