Gardening Tips : சின்ன இடத்தில் அமைக்கலாம் சிறப்பான தோட்டம்; இந்த ஐடியாக்கள் போதும் அழகாகும் இல்லம்!
Gardening Tips : சின்ன இடத்தில் அமைக்கலாம் சிறப்பான தோட்டம், இந்த ஐடியாக்கள் போதும் அழகாகும் இல்லம். உங்கள் வீட்டை மேலும் அழகாக்கலாமா?
வீட்டில் ஒரு தோட்டம் இருப்பது வீட்டை அழகாக்கும். உங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான மற்றும் ஃபிரஷ்ஷான காய்கறிகள், பழங்கள் கிடைக்கும். வீட்டில் தோட்டம் இருந்தால் மனஅழுத்தம் குறையும் என்பது, நிரூபிக்கப்பட்ட உண்மை. உங்களின் மனநிலையை அது மாற்றும். உங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டம் உங்கள் வீட்டுக்கு அழகு கூட்டும். சிறிய இடம்தான் உள்ளது என்றாலும் அதில் முறையாக பராமரித்தால் அழகான தோட்டம் அமைக்கலாம். அது எப்படி என்று பாருங்கள்.
சரியான தாவரங்களை தேர்ந்தெடுங்கள்
சிறிய இடத்தில் வைக்க முடிந்த தாவரங்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள். மூலிகைச் செடிகள், கீரைகள், காய்கறிகள் மற்றும் பழமரங்கள் என அவையிருக்கட்டும். குறைவான இடத்தில் வளரக்கூடிய காய்கறி செடிகள் சந்தையில் கிடைக்கும் அவற்றை வாங்கி கட்டாயம் பயன்படுத்துங்கள். உள்ளூரில் உங்களுக்கு என்னென்ன தாவரங்கள் கிடைக்கும்? வெளியூரில் எதை வாங்கவேண்டும் என பட்டியலிட்டாலே, நீங்கள் என்ன செடி வளர்க்கலாம் மற்றும் எதை வாங்கலாம் என்ற பட்டியல் கிடைத்துவிடும்.
மேலே வளருங்கள் வெளியே அல்ல
ஒரு செங்குத்தான இடத்தில் தொங்கும் தொட்டிகள் உள்ளிட்ட புதிய தோட்டக்கலை நுட்பங்களை பயன்படுத்தி, இடத்தை குறைவாகப் பயன்படுத்தி தாவரங்களை வளர்த்தெடுங்கள். அதுபோல் செங்குத்தான ஒன்றில் நீங்கள் தாவரங்கள் வளர்க்கப்போகிறீர்கள் என்றால், அதை உங்கள் தோட்டத்தில் வடக்கு திசையில் வையுங்கள். அப்போதுதான் அது மற்ற தாவரங்களுக்கு நிழலை ஏற்படுத்தாது. வெள்ளரி, தக்காளி, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற தாவரங்கள் கொடிகளாக இருக்கும்.
ஒரே தொட்டியில் பல்வேறு செடிகளை வளர்க்கக்கூடிய புதிய தொட்டிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். மூலிகை கோபுரம் அமைக்கலாம். இதை நீங்கள் வீட்டிலேயே கூட செய்ய முடியும் அல்லது அதற்கான பிரத்யேக தொட்டிகள் வாங்கிக்கொள்ளுங்கள். அது ஒரு அலங்காரப் பொருளாக மட்டுமின்றி, பல்வேறு மூலிகைகளுக்கும் ஒரே தொட்டியில் இடம் கொடுக்கிறது. சிறிய இடத்தை அதிகம் பயன்படுத்தவும் உதவுகிறது.
நீங்கள் உபயோகிக்காத சுவர்களை மூலிகை சுவர்களாக மாற்றுங்கள். இந்த சுவரில் நீங்கள் எந்த மூலிகைச் செடியையும் வளர்க்கலாம். ஓமவல்லி, துளசி போன்ற மூலிகைகளை அதில் எளிதாக வளர்க்கலாம். சுவரில் வளர்ந்து அது உங்கள் வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கும்.
செடிகளை நடும் விதம்
ஒரே அளவு தண்ணீர், சூரிய ஒளி, மண் தேலைப்படும் தாவரங்களை வகைப்படுத்துங்கள். இது இடத்தை முழுமையான பயன்படுத்த உங்களுக்கு உதவும். மிகவும் நெருக்கமாக வளரும் தாவரங்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வெளிச்சம் கிடைக்காது. எனவே கொஞ்சம் செடிகளுக்கு சரியான இடைவெளிவிட்டு, நடுங்கள். இது அவை நன்றாக செழித்து வளர உதவும். எனவே குறைவான இடத்தில் நெருக்கமாக செடிகளை வளர்த்து அவற்றை முறையாக வளரவிடாமல், கொஞ்சம் செடிகளை மட்டும் வளர்த்து பலன்பெறுங்கள்.
துணை தாவரங்கள்
துணை தாவரங்களாக பல்வேறு வகை தாவரங்கள் வளர்க்கலாம். அதனால் அவை ஒன்றுக்குகொன்று நன்மை தரும். சில தாவரங்கள் இணைந்திருந்தால், அது பூச்சிகளை அழிக்கும். நிழலை தாங்கும் தாவரங்களை உயரமாக வளரும் தாவரங்களின் அடியில் வளர்க்கலாம். எடுத்துக்காட்டாக, துளசியை தக்காளிச்செடிக்கு அடியில் வளர்க்கலாம். ஏனெனில் அது நிழலில் வளரும்.
ஊடுபயிர்
ஊடு பயிர் என்பது, பெரிய பயிர்களுக்கு இடையில் சிறிய பயிர்கள் நடுவது ஆகும். சிறிய தாவரங்கள், வேகமாக வளரு தாவரங்கள், பெரிய தாவரங்கள் வளர்வதற்குள் வளர்ந்து வந்துவிடும். இது நீண்ட காலம் தாவரங்கள் செழித்து வளர உதவும். கீரை, முள்ளங்கி, பட்டாணி போன்ற விரைவாக அறுவடை செய்யப்படும் தாவரங்களை மெதுவாக வளரும் ப்ரோகோலி, குடைமிளகாயுடன் வளர்க்கலாம். பூச்செடிகளை நட்டு வளர்க்கலாம். இவையிரண்டையும் சேர்த்து நடும்போது கவரும் வகையில் இருக்கும்.
தொடர்ந்து நடுவது
ஒரு செடியை அறுவடை செய்தவுடன், அடுத்த தாவரங்களை தொடர்ந்து நட்டுவிடவேண்டும். இது காய்கறி தோட்டத்துக்கு சிறந்தது. குறைவான இடத்தில் வளர்க்கலாம். இதனால் உங்கள் தோட்டத்தில தொடர்ந்து பயிர்கள் இருந்துகொண்டே இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்