Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் உள்ள செடிகளை எப்போது, எவ்வளவு வெட்ட வேண்டும்?
Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் உள்ள செடிகளை எப்போது, எவ்வளவு வெட்ட வேண்டும் என்று தெரிந்துகொள்வது செடிகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியம்.
உங்கள் வீட்டில் உள்ள சிறிய தோட்டமோ அல்லது பெரியதோ அதற்கு பராமரிப்பு என்பது கட்டாயம் வேண்டும். உங்கள் தோட்டத்தை பராமரிக்கத் தேவையான குறிப்புகளை நீங்கள் தெரிந்துகொள்வது உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் அனைத்தும் வளர்வதற்கு துணைபுரியும். நீங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்பினால் அது உங்களுக்கு பல்வேறு விஷயங்களை மனதில் ஏற்படுத்தும். அதுவும் உண்மைதான், ஒரு தோட்டம் அமைக்க நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இதுதான். நீங்கள் உங்களின் தாவரங்களை நடவு செய்வது எப்படி? சிறந்த மண் எது? அவற்றை எப்போது வெட்டவேண்டும்? அவற்றுக்கு போதிய தண்ணீர் மற்றும் சூரியஒளி கிடைக்க என்ன செய்யவேண்டும். இயற்கையே சிறந்த ஆசான். நீங்கள் தோட்டம் அமைக்க அமைக்க, உங்களுக்கு எது சரியாக செயல்படும். எது வளராது என்பதை கற்றுக்கொடுத்துவிடும்.
தோட்டக் குறிப்புகள்
உங்களுக்குத் தேவையான தோட்டக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக யாருக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்றால், தோட்டம் அமைக்கும் வேலையை துவங்கியுள்ளவர்களுக்குத்தான். தோட்டத்தை நீங்கள் கஷ்டப்பட்டு நடவேண்டாம். இந்த குறிப்புக்களை பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியுடன் தோட்ட வேலைகளில் ஈடுபட முடியும்.
எப்போது செடிகளை வெட்ட வேண்டும்?
நீங்கள் செடிகளை தேர்ந்தெடுத்து நட்டு வளர்த்துவிட்டீர்கள். ஆனால் அவற்றை எப்போதும் நீங்கள் டிரிம் அல்லது வெட்டி வைக்கவேண்டும். அப்போதுதான் அடர்ந்து வளராமல் தேவையான அளவு மட்டுமே வளரும். பூக்கவும் செய்யும். அழகிய தோற்றமளிக்கும்.
எப்போது செடிகளை டிரிம் செய்யவேண்டும் என்று தெரியவில்லையா? இதோ இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். மலர்க்கொடிகளை வசந்த காலத்தில் டிரிம் செய்யவேண்டும். அவை பூப்பது நின்றவுடனே டிரிம் செய்துவிடவேண்டும்.
அவை கடந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் மொட்டுவிடத்துவங்கியிருக்கும். நீங்கள் அவற்றை நீங்கள் பனிக்காலத்தில் டிரிம் செய்தால், அடுத்த ஆண்டுக்கான மொட்டுகளை நீங்கள் அகற்றுகிறீர்கள் என்று பொருள்.
ஆண்டுக்கொருமுறை இவ்வாறு செய்வது நல்லது. ஏனெனில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் மலர்களின் இலக்கு பூப்பது, விதைப்பது மற்றும் இறப்பது ஆகும். எனவே பழைய பூக்களை அகற்றிவிட்டால் ஆண்டுகொருமுறை பூக்கும் மலர்கள் நிறைய பூக்கும்.
பழைய பூக்களை அகற்றுவதும், செடிகளை மேலும் பூக்கவும், வலுவான இலைகளாகவும், வேர்களாகவும் மீண்டும் வளர ஊக்கப்படுத்தும். விதைகளின் உற்பத்தியும் நன்றாக இருக்கும். பழுத்த இலைகளை அகற்றுவது, அலங்கரிக்கும் வழிகளுள் ஒன்றும் ஆகும்.
பழுத்த இலைகளை நீக்கும்போது, அவை வசந்த காலத்தில் மலர்வதற்கு தேவையான ஆற்றலைப்பெறும். விதைகளை உருவாக்குவதற்கு பதில் மொட்டுகளுக்கு ஆற்றலை அனுப்பும். சில இலைகளை பிரவுன் நிறத்தில் மாறும் வரை விட்டுவிட்டு நீங்கள் அவற்றை அகற்றலாம்.
ஏனெனில் அந்த இலைகள் தான் அடுத்த துண்டு பூக்கள் மலரத் தேவையான ஆற்றலை சேமித்து வைக்கின்றன. மேற்புறத்தில் உள்ள பழுத்த இலைகளை நீக்கினால்தான், உள்புறத்தில் உள்ள இலைகளுக்கு வெளிச்சம் கிடைக்கும். எனவே செடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு தேவையான நேரத்தில் அதை வெட்டுவது நல்லது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், சுவை மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் தினமும் தொகுத்து வழங்கி வருகிறது. மேலும் இதுபோன்ற தகவல்கள், ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்