Gardening : இடமிருந்தால் தோட்டம்; இல்லாவிட்டால் தொட்டி; செடி வளர்த்து வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்!
Gardening : இடமிருந்தால் தோட்டம்; இல்லாவிட்டால் தொட்டி; செடி வளர்த்து உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நீங்கள் சாகுபடி செய்து வீட்டின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
உங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க முடிவு செய்துவிட்டீர்களா? சரியான இடம், செடி வகை, மண், செடிகள், கருவிகள், திட்டம் என அனைத்தையும் தயார் செய்துவிட்டீர்களா? தாராளமான இடம் இருந்தால், ஒவ்வொரு தாவரத்துக்கும் போதிய இடைவெளி, போதிய அளவு கொடுத்து நடலாம். ஆனால் தொட்டியில் தான் தாவரங்களை வளர்க்கவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பிரத்யேகமாக சில விஷயங்களை கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள இட அளவுக்கு ஏற்ப தொட்டிகளை வாங்கிக்கொள்ளுங்கள்
உங்கள் வீட்டில் சிறிய இடம்தான் உள்ளது என்றால், நீங்கள் அதற்கு ஏற்றாற்போல் அளவில் தொட்டிகளை வாங்கிக்கொள்ளவேண்டும். அதை சரியான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும். தொட்டிகளை சரியான இடங்களில் வைப்பது மிகவும் அவசியம். ஏனெனில், தாவரங்களுக்கு நல்ல காற்று, வெளிச்சம் என கொடுக்கவேண்டும்.
அப்போதுதான் செடிகள் செழித்து வளரும். அதற்கு ஏற்ற தாவர வகைகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். தொட்டிச் செடிகளிலும் நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நடலாம். கீரைகளை வளர்க்க விரும்பினால் கொஞ்சம் பெரிய தொட்டிகளாக வாங்கிக்கொள்ளுங்கள்.
ஒரே தொட்டியில் பல்வேறு வகை செடிகளை வளர்க்கும் வகையில் தொட்டிகள் கிடைக்கின்றன. எனவே அதுபோன்றவற்றை வாங்கினால், நீங்கள் ஒரே தொட்டியில் நிறைய செடிகளை, குறைவான இடத்தில் வளர்க்க முடியும். இடப்பற்றாக்குறை உள்ளவர்களுக்கு இதுபோன்ற தொட்டிகள் உதவும்.
இது உங்கள் வீட்டையும் அலங்கரிக்கும். உங்கள் வீட்டின் காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். இதை நீங்கள் சிறிய இடங்களிலும் செய்யலாம் அல்லது மொட்டை மாடியிலும் தோட்டம் அமைத்து செய்ய முடியும்.
உடன் நடும் செடிகள்
மனிதர்களைப்போல் தாவரங்களுக்கும் துணையாக சில தாவரங்கள் இருக்கவேண்டும். அந்த தாவரங்கள் வேறு வகை தாவரங்களாகவும் இருக்கலாம். ஒரே இடத்தில் பல்வேறு வகை தாவரங்களை வளர்க்கும்போது, அது உங்களுக்கு இடத்தை அதிகம் பயன்படுத்த உதவுகிறது.
பூச்சிககைள குறைக்கவும், ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவும். ஒரு தாவரத்துக்கு அருகில் ஒரு தாவரத்தை நடும்போது, அது உங்களுக்கு அவையிரண்டின் வளர்ச்சிக்கும் உதவும் அல்லது ஒன்று மற்றொன்றின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே தாவரங்கள் நடுவதில் கவனம் தேவை.
எடுத்துக்காட்டாக, தக்காளி நன்றாக செழித்து வளரும், அதேநேரத்தில் அந்தச் செடி கொசுக்களை அடித்து விரட்டும். அதற்கு அதன் அருகில் துளசிச்செடியை சேர்த்து வளர்க்கவேண்டும். இதுபோல் அதனுடன், கேரட், வெங்காயம், லெட்யூஸ், மல்லி, கீரை என வளர்க்கலாம். ஆனால் முட்டைக்கோஸ், பீட்ரூட், கார்ன், வெந்தயக்கீரை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை வளர்க்கக் கூடாது.
செடிகளை வெட்டுவது
செடிகள் நன்றாக செழித்து வளரவேண்டுமெனில், அவற்றை போதிய அளவு மட்டும் வைத்துக்கொண்டு, தேவையற்றதை நறுக்கிவிடவேண்டும். அப்போதுதான் புதிய இலைகள் துளிர்க்கும். தாவரங்களும் நன்றாக வளரும். ஒவ்வொரு தாவரத்துக்கும், ஒவ்வொரு வானிலைக்கும் ஏற்றவாறு அவற்றை நாம் வெட்டவேண்டும்.
பழங்கள் மற்றும் பூச்செடிகளை பனிக்காலத்திற்கு பின்னர் டிரிம் செய்யவேண்டும். அப்போதுதான் அது இலையுதிர் காலத்தில் நல்ல விளைச்சலை தரும். மரங்கள் மற்றும் புதர் போல் அடர்ந்து வளரும் செடிகள் இலையுதிர் காலத்தில் பூக்கும், பழைய பூக்கள் உதிர்ந்த உடனே புதிய மொட்டுக்கள் தோன்றும். மொட்டுகள் வருவதற்கு முன்னர் அவற்றை டிரிம் செய்யவேண்டும். அனைத்து வகை செடிகளையும் அவ்வப்போது நறுக்கி வைக்கவேண்டும். அப்போதுதான் செடிகள் ஆரோக்கியமாக வளரும்.
தொடர்ந்து செடி வளருங்கள்
உங்கள் செடிகளை நீங்கள் நன்றாக வளரவைத்தால், உங்கள் தோட்டமும் அழகாக இருக்கும். உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உங்கள் தோட்டத்தை அழகாக்க இறந்த செடிகளை நீக்குவது, களைகளை எடுப்பது, டிரிம் செய்வது என நீங்கள் செய்யவேண்டும்.
வளர்ச்சி தடைபட்டால், வேர்களை கவனிக்கவேண்டும். நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல்களை சமாளிக்கவேண்டும். தேவைப்பட்டால் உடனடியாக தண்ணீர், இயற்கை உரங்களை இட்டு காப்பாற்ற வேண்டும். நீங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்பினால், உங்களுக்கு தேவையான செடிகளை தேர்ந்தெடுத்து, மண்ணை வளமாக்கி, செடிகளை வளர்த்து மகிழுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்