Gardening : உடல் எடை குறைப்பு முதல் எண்ணற்ற நன்மைகளைத் தரும் சியா செடிகளை வீட்டிலே வளர்க்க முடியும்! எப்படி பாருங்கள்!
Gardening : உடல் எடை குறைப்பு முதல் எண்ணற்ற நன்மைகளைத் தரும் சியா செடிகளை வீட்டிலே வளர்க்க முடியும் தெரியுமா? அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டில் சியா செடிகளை வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சியா செடிகள் வளர்ப்பு
வீட்டிலே பாட்டிலில் வைத்து சியா செடிகளை வளர்க்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சியா விதைகளை சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக எடைகளை குறைக்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக உள்ளது சியா விதைகள். ஆனால் சியா விதைகளை வீட்டில் தொட்டியில் வைத்து நீங்கள் வளர்த்து அறுவடை செய்து, சாப்பிட்டு மகிழலாம். அது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
சியா விதைகள், பாட்டில் அல்லது உபயோகமற்ற பொருள், அது கொஞ்ம் பாரம் தாங்கக்கூடியதாக இருக்கவேண்டும். டிஷ்யூ பேப்பர்கள், ஸ்ப்ரே பாட்டில், மறைமுகமாக சூரிய ஒளி கிடைக்கும் ஒரு இடம்.
பாட்டிலை என்ன செய்யவேண்டும்?
முதலில் சூடான தண்ணீரில் பாட்டிலை கழுவி, காய வைக்கவேண்டும். பின்னர் மூடி இருக்கும் பகுதியை வெட்டிவிட வேண்டும். அதை திறந்திருக்கும் ஒரு பாட்டிலாக மாற்றிவிடவேண்டும். அதன் விளிம்புகள் மிகவும் ஷார்ப்பாக இருக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
டிஷ்யூ
கொஞ்சம் டிஷ்யூ பேப்பர்களை எடுத்து, அவற்றை சிறிது ஈரமாக்கிக்கொள்ளவேண்டும். ஈரமாக இருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் சொட்டக்கூடாது. இதை செய்து முடித்துவிட்டால், இந்த டிஷ்யூ பேப்பர்களை பாட்டிலை சுற்றி கட்டிவிடவேண்டும்.
பாட்டிலைச் சுற்றி கட்டுவது
ஈரமான டிஷ்யூக்களை பாட்டிலின் வெளிப்புறத்தில் சுற்றி கட்டிவிடவேண்டும். அதில் தான் சியா விதைகள் வளரும். அவை மிகவும் ஈரமாக இருக்கக் கூடாது என்பதால் சொட்டும் அளவு தண்ணீரை பிழிந்து எடுத்துவிடவேண்டும். குறைவான ஈரப்பதம் இருந்தால் போதும். அதிக ஈரமாக இருந்தால் அவை கிழிந்துவிடும். அவற்றை பாட்டிலில் அந்த மிதமான ஈரப்பதத்தை வைத்து ஒட்டிவிடவேண்டும்.
விதைப்பு
பாட்டிலை தயார் செய்தவுடன், பாட்டிலின் உள்ளே சியா விதைகளைப்போட்டு நன்றாக தட்டவேண்டும். மற்றொரு பாட்டிலையும் இதேபோல் தயாரித்துக்கொண்டு, அதன் வெளிப்புரத்தில் சியா விதைகளை ஒட்டவேண்டும். மலர்ந்த ஒட்டும் பதத்தில் இருக்கும் சியா விதைகளை தேர்ந்தெடுத்து ஒட்டவேண்டும்.
தண்ணீர்
டிஷ்யூ பேப்பரில் சியா விதைகள் நன்றாக ஒட்டிக்கொண்டபின், அதில் தண்ணீரை ஸ்பிரே மூலம் ஸ்பிரே செய்துவிடவேண்டும். தினமும் இதைச் செய்யவேண்டும். இது பேப்பரில் அந்த விதைகள் ஒட்டிக்கொள்ள உதவும். ஈரப்பதத்தை உறிஞ்சும்.
ஈரப்பதம்
விதைகள் முளைத்துவரத்துவங்கியவுடன், பாட்டிலை பிளாஸ்டிக் கவர்கள் வைத்து மூடவேண்டும். ஆனால் பிளாஸ்டிக்கை கட்டாதீர்கள். நாம் செடிகளை ஈரப்பதத்துடன் வைக்கவேண்டும். இது விதைகள் முளை க்க உதவும்.
பராமரிப்பு
14 நாட்களில் சியா செடிகள் உயரமாக வளர்ந்துவிடும். இதன் தண்டு மற்றும் இலைகளையும் சாப்பிடலாம். நன்றாக வெட்டினால், அடர்ந்து வளரும். இதன் இலைகளை வழக்கமாகக் வெட்டவேண்டும். இது தொடர்ந்து கீரை செழித்து வளர உதவும்.
ஹெச்.டி தமிழ் தினமும் உங்களுக்கு பல்வேறு தலைப்புகளில் சுவாரஸ்யமான செய்திகளை வழங்கிவருகிறது. வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், தோட்ட பராமரிப்பு குறித்தும் பல அரிய தகவல்களை வழங்கி வருகிறது. நீங்கள் தோட்டம் வைப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தீர்கள் என்றால், இந்தப்பகுதியில் வரும் குறிப்புக்களை படித்து பயன்பெறுங்கள். தோட்டம் தொடர்பான பல்வேறு செய்திகளுக்கு ஹெச்.டி தமிழுடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்