Garden : ‘என் வீட்டு தோட்டத்தில்’ உங்கள் பால்கனியிலே வளர்த்துவிடலாம் இந்த பூச்செடிகளை! வீடே மணக்கும்!
Garden : ‘என் வீட்டு தோட்டத்தில்’ உங்கள் பால்கனியிலே வளர்த்துவிடலாம் இந்த பூச்செடிகளை, இதனால் உங்கள் வீடே மணக்கும். மனதை கொள்ளை கொள்ளும்.
உங்கள் வீட்டு பால்கனி தோட்டத்திலே இந்த பூச்செடிகளை எளிதாக வளர்த்துவிட முடியும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டு தோட்டத்துக்கு ஏற்ற மலர்களை கூறுங்கள். ஒரு பரபரப்பான நாளில் நீங்கள் அமர்ந்து ரிலாக்ஸ் செய்ய, அமைதியாக ஓய்வெடுக்க, அன்றைய நாளில் என்ன நடந்தது என பட்டியலிட ஒரு இடம் வேண்டுமல்லவா? அது உங்கள் பால்களி தோட்டமாக இருந்தால் எப்படியிருக்கும். சூரிய ஒளி படும் இடத்தில், செடிகள் மற்றும் பூக்கள் பூத்துக்குலுங்கும்போது, அங்கு வரும் பட்டாம் பூச்சிகளும், சிட்டுகுருவிகளும் உங்களுக்கு என்ன சொல்லும். உங்கள் வீட்டு பால்கனியிலே வைத்து எளிதாக வளர்த்துவிடக்கூடிய பூச்செடிகளை இங்கு பார்க்கலாம். உங்கள் பால்கனியில் இவற்றை வைத்து உங்கள் வீட்டின் அழகை அதிகரியுங்கள்.
மல்லிகை
மல்லிகைப் பூச்செடிகளை நீங்கள் உங்கள் வீட்டு பால்கனியிலே வைத்து வளர்த்துவிடலாம். மல்லிகைப் பூக்கள் அவற்றின் கவர்ந்து இழுக்கும் தன்மைக்காக புகழ்பெற்றது. இதன் இனிய மணம், உங்களின் மனஅழுத்தத்தைப் போக்கி, மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது. இந்த பூக்கள் உங்களை பால்கனியில் வந்து அமர அழைக்கும். அவை பூக்கும்போதே உங்கள் வீட்டில் ரம்மியமான சூழல் நிலவும்.
அல்லி
அல்லி மலர் மிகவும் அழகான மலராகும். இந்த மலர்களின் நளினம் உங்களை மனமகிழச்செய்யும். இதன் இதழ்கள், குழல்போல் இருக்கும். இது மலரும்போது நறுமணம் பரவும். அல்லி மலர்கள் பல வண்ணங்களில் உள்ளது. வெள்ளை மற்றும் பிங்க் வண்ண மலர்கள் மிகவும் சிறப்பானவை.
அடுக்கு மல்லி
அழகிய வெண்ணிற பூக்களைக் கொண்டது இந்த அடுக்கு மல்லி, இந்தப் பூக்கள் ரோஜாப்பூக்களின் தோற்றத்தை ஒத்திருக்கும். இதன் இதழ்கள் விரிவானவை, இது அவற்றின் அழகிய தோற்றத்துக்கு மட்டுமல்ல இதன் நறுமணத்துக்கும் சிறந்தது. இதன் இனிமையான மணம் உங்கள் பால்கனியில் இருந்து வீடு முழுவதும் பரவும். இந்த மலர்கள், உங்களை பால்கனியில் அமரவைக்கும். அவை மலரும்போது உங்களின் மனம் மகிழும் உணர்வைத்தரும்.
செம்பருத்தி
செம்பருத்தி உங்கள் வீட்டுக்கு அழகைத்தரும் மலர் மட்டுமல்ல, இது மருத்துவ குணம் நிறைந்ததும் ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை போக்கக்கூடியது என்பதால், இது ஒவ்வொரு பால்கனியிலும் வளர்க்கவேண்டிய மலர் ஆகும். இதன் மிருதுவான இதழ்கள் மற்றும் பிரகாசமான வண்ணம் உங்கள் வீட்டுக்கு அழகிய தோற்றத்தைத் தரும்.
ரோஜாப்பூ
ரோஜாப்பூக்கள் அன்பின் அடையாளம், வெள்ளை ரோஜா என்றால் அது சமாதானம், இதன் மணமும் உங்கள் வீடு முழுவதையும் நிரப்பும். இதன் அடர் சிவப்பு வண்ணம், வெளிர் பிங்க் வண்ணமும், ஆரஞ்சு வண்ணமும் கண்களுக்கு விருந்துதான். எந்த நிறத்தில் ரோஜாப்பூக்கள் என்றாலும், அது உங்கள் வீட்டுக்கு அழகுதான்.
லாவண்டர்
லாவண்டர் அமைதியான தோற்றத்தைக் கொண்ட ஒரு மலர், இதன் மணமும் வீட்டில் நிறையும்போது உங்கள் வீடே அழகாக மாறும். இதில் சிறிய பர்பிள் மலர்கள் பூக்கும். இது உங்கள் பால்கனி தோட்டத்தின் அழகை அதிகரிக்கும்.
பாரிஜாதம்
பாரிஜாதம் அல்லது இரவில் மலரும் மல்லிகை என்று அழைக்கப்படும். வெள்ளை மலர்களின் மத்தியில் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணத்தில் நிறைந்திருக்கும். இதன் பெயரிலே தெரிந்துவிடும் இது இரவில் மலர்ந்து மணம் பரப்பும் மலர் என்று, இது சூரியன் மறையும்போதுதான் மலரத்துவங்கும். மெதுவாக சூரியன் அதிகாலையில் வரும் வரை மலர்ந்து முடிக்கும்.
செண்பகம்
செண்பக மலர்கள், உங்கள் வீட்டுக்கு அழகுதரும் மற்றொரு மலராகும். இதை உங்கள் வீட்டு பால்கனி தோட்டத்தில் வைத்தால் அது உங்களுக்கு பல்வேறு நன்மைகளைத்தரும். இது நன்றாக மலர்ந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இதழ்களைக் கொண்ட மலர். இதன் நறுமணம், உங்களின் நாளை அழகாக்கும்.
அலிசம்
அலிசம் பூச்செடிகளை பராமரிப்பது எளிது. இது மற்ற செடிகளுக்கு ஆகும் அளவைவிட குறைந்த அளவில் எளிதாக பராமரித்துவிடலாம். இதன் மலர்கள் அழகிய லுக்கை தரக்கூடியவை. சிறிய பூக்கள் பூத்துக் குலுங்கும். இது பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். இது இனிமையான தேன் போன்ற நறுமணத்தை பரப்பும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்