Garden : இந்த பூச்செடிகளை வளருங்கள்; உங்கள் தோட்டமே மணக்கும்; வீட்டில் நந்தவனம் அமைக்க இதோ ஐடியாக்கள்!
Garden : இந்த பூச்செடிகளை வளர்த்துப்பாருங்கள். உங்கள் தோட்டமே மணக்கும். வீட்டில் நந்தவனம் அமைக்க இதோ ஐடியாக்கள், இவற்றை செய்து பலன்பெறுங்கள்.
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இந்த பூச்செடிகளை வளர்த்தால் போதும். உங்கள் வீடே மணக்கும்.
வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பூக்கள்
உங்கள் வீட்டு தோட்டத்தை அலங்கரிக்கவும் உங்கள் வீட்டில் மணம் நிறையவும் வேண்டுமெனில் நீங்கள் வீட்டில் பூச்செடிகளை வளர்க்கவேண்டும். பூக்கள், இலைகள், வண்ணமயமான காட்சிகள் என உங்கள் கண்கள் மற்றும் மனம் இரண்டையும் கவர்வதாக இருக்கும். உங்கள் வீட்டுத் தோட்டத்தின் அழகுக்கும், மணத்துக்கும் நீங்கள் இந்த பூச்செடிகளை அதில் நட்டு வளருங்கள்.
செண்பகப்பூக்கள்
சம்பா மலர்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூத்துக்குலுங்கும். இதன் தனித்தன்மையான மணம், உங்களின் மனதைக்கவரும். இதன் நீண்ட இதழ்கள், இவற்றை வளர்ப்பதை எளிதாக்கும்.
நித்யகல்யாணி
நித்திய கல்யாணி என்றால், கடும் மணத்தைக்கொண்ட மலர் என்று பொருள். இதை நீங்கள் வீட்டுத்தோட்டம் அல்லது 4 தொட்டிகளில் வைத்து வளர்த்தால், வீட்டில் மணம் பரப்பும். அதன் இலைகளை நீங்கள் கொஞ்சம் கசக்கினாலே அதில் இருந்து வரும் எண்ணெய் போன்ற திரவம் பறவைகளை கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது.
மல்லிகை
மல்லிகைப்பூக்கள் சில நேரங்களில் இரவில் மலர்ந்து மணம் பரப்புபவையாக இருக்கும். இதை நீங்கள் உங்கள் தோட்டத்தில் வைத்தால், அந்த இடமே வாசமாக இருக்கும்.
ரோஜா
ரோஜாப்பூக்கள் அழகான, இனிமையான மணத்தைக் கொண்ட மலர். இதை உங்கள் தோட்டத்தில் நட்டுவைத்து வளர்த்தால் உங்கள் தோட்டமே மணம் வீசும். நல்ல சிவப்பு வண்ண மலரின் மனம் உங்களின் மனநிலையை மாற்றும். உங்கள் மனதை ரம்மியமாக்கும்.
வெள்ளை அல்லி
வெள்ளை நிறத்தில் மலரும் அல்லிப்பூக்களின் செடிகளையும் நீங்கள் உங்கள் தோட்டத்தில் வைக்கலாம். இது சிறிய ரோஜாக்களைப் போல் இருக்கும். இதை நீங்கள் தொங்கும் தொட்டிகளில் வைத்து வீட்டில் வளர்க்கலாம். இது அழகு நிறைந்தது ஆகும்.
ஆலிசம் பூச்செடி
இது ஊதா, பிங்க், வெள்ளை, பர்பிள் மற்றும் லாவண்டர் என மேலும் பல வண்ணங்களில் சிறிய பூக்களாக பூக்கும். அல்லியைப்போன்ற மலர்கள்தான் இதுவும். இது உங்கள் வீட்டுக்கு அழகையும், மனத்தையும் கொண்டுவரும். இதில் தேன் போன்ற இனிய மணம் இருக்கும். இதை நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்கவேண்டும் அல்லது கட்டாயம் 1 அல்லது 2 மணி நேரங்கள் சூரிய ஒளி படவேண்டும்.
யூனலிப்டஸ்
யூகலிப்டஸ்தான் கேலாக்களுக்கு மிகவும் பிடித்த உணவு. இதன் இலைகள் அழகான மற்றும் நல்ல மணத்தைக் கொண்டவை. ஒரு யூகலிப்டஸ் செடி இருந்தால், அந்த இடம் முழுவதும் மனம் வீசும். இதன்பராமரிப்பு மிகவும் எளிமையானது. இதை நீங்கள் அவ்வப்போது வெட்டி வந்தாலே இது செழித்து வளரும் தன்மைகொண்டது.
சங்குப்பூ
சங்குப்பூ என்பது உங்கள் வீட்டுக்கு அழகைத்தரும். அது மட்டுமின்றி மருத்துவ குணங்கள் நிறைந்தது. உங்கள் வீட்டில் மணத்தை பரபுபும். இதன் ஊதா வண்ணம் பார்ப்பவர் கண்களைக் கவரும். இதை உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளர்த்தால் அது உங்கள் வீட்டுத்தோட்டத்தை அழகாக்கும். மலர்ந்து மனம் பரப்பும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்