Aval Nei Prasad - விநாயகருக்கு பிடித்த அவல் நெய் பிரசாதம் - எளிமையாக செய்வது எப்படி?
விநாயகருக்கு பிடித்த அவல் நெய் பிரசாதம் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் விநாயகருக்குப் பிடித்த அவலில், அவல் நெய் பிரசாதத்தை எளிமையாகத் தயாரித்து, விநாயகருக்குப் படைத்து வழிபட்டு, நாமும் பிரசாதத்தை எடுத்துக்கொள்வது சாலச்சிறப்பு.
ட்ரெண்டிங் செய்திகள்
அவல் நெய்பிரசாதம் செய்யப்பயன்படும் பொருட்கள்:
நெய் - இரண்டு டீஸ்பூன்;
முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு;
வெல்லம் - ¾ கப்;
நீர் - ¼ கப்;
அவல் - ஒரு கப்;
தேங்காய்த்துருவல் - அரை கப்;
ஏலக்காய்ப்பொடி - அரை ஸ்பூன்;
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம். அந்த நெய்யில் கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் உலர் திராட்சை சேர்த்துக்கொண்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும். அதே பாத்திரத்தில் ¾ கப் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். கால் கப் நீர் சேர்த்து, 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்துக்கொள்ளலாம். இப்போது அடுப்பினை அணைத்துவிட்டு, அந்த பாத்திரத்தை இறக்கி வைத்துக்கொள்ளலாம்.
இப்போது ஒரு பவுலில் ஒரு கப் வெண்மை நிற அவல் எடுத்துக்கொள்ளவும். அதில் நாம் கொதிக்கவைத்த வெல்லத் தண்ணீரை வடிகட்டியால், வடிகட்டி அவலில் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது அவலில் சேர்த்த வெல்லப்பாகுவை ஸ்பூனால் நன்கு கலந்துகிளறிக்கொள்ளவும். அதில் அரை கப் தேங்காய்த் துருவல், வாசனைக்கு அரை ஸ்பூன் ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். பின், தட்டுப்போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம். அப்போதுதான் நமக்கு மிருதுவான அவல் கிடைக்கும். இப்போது அதனைக் கிளறிக்கொள்ளவும். அதனைத் தொடர்ந்து நாம் நெய்யில் வறுத்துவைத்த முந்திரியை சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை விநாயகருக்கு, நைவேத்தியமாக வைத்துப் படைக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்