Gallbladder Stone : பித்தப்பையில் கல்லா? மருத்துவம் எதுவும் தேவையில்லை! எது உதவும் என்று தெரிந்தால் ஷாக் ஆவீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gallbladder Stone : பித்தப்பையில் கல்லா? மருத்துவம் எதுவும் தேவையில்லை! எது உதவும் என்று தெரிந்தால் ஷாக் ஆவீர்கள்!

Gallbladder Stone : பித்தப்பையில் கல்லா? மருத்துவம் எதுவும் தேவையில்லை! எது உதவும் என்று தெரிந்தால் ஷாக் ஆவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Published Jul 20, 2024 11:00 AM IST

Gallbladder Stone : பித்தப்பையில் கல்லா? மருத்துவரிடம் சென்று அறுவைசிகிச்சை செய்ய தேவையில்லை. ஆனால் உங்கள் அன்றாட உணவிலே அதற்கு தீர்வு உள்ளது. அது என்னவென்று தெரிந்தால் கட்டாயம் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்

Gallbladder Stone : பித்தப்பையில் கல்லா? மருத்துவம் எதுவும் தேவையில்லை! எது உதவும் என்று தெரிந்தால் ஷாக் ஆவீர்கள்!
Gallbladder Stone : பித்தப்பையில் கல்லா? மருத்துவம் எதுவும் தேவையில்லை! எது உதவும் என்று தெரிந்தால் ஷாக் ஆவீர்கள்!

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். 

ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

பித்தப்பை

பித்தப்பையில் சேரும் கொழுப்பே கற்களாக மாறுகிறது. உங்கள் பித்தப்பை சிறிய, பேரிக்காய் போன்ற ஒரு உறுப்பு. உங்கள் வயிற்றின் வலது புறத்தில் இருக்கும். உங்கள் கல்லீரலுக்கு கீழே அமைந்திருக்கும். இந்த பித்தப்பையில் பித்தம் இருக்கும். இதை சிறுகுடலுக்கு வெளியிடப்படும் செரிமானத்துக்கு உதவக்கூடிய ஒரு திரவம் ஆகும்.

பித்தப்பை கற்கள்

அதிகப்படியான பித்தம் மற்றும் கொழுப்பு கட்டியாகி பித்தப்பையில் கல் ஏற்படுகிறது. பித்தம், கல்லீரல் வெளியிடும் செரிமானத்துக்கு உதவக்கூடிய ஒரு திரவம். நீங்கள் சாப்பிடும்போது, உங்கள் பித்தப்பை நீங்கள் சாப்பிடும் உணவை செரிக்கவைக்க சிறு குடலுக்கு பித்தத்தை அனுப்புகிறது.

சிறியது முதல் பெரிய அளவில் பித்தப்பையில் கற்கள் உருவாகும். சிலருக்கு ஒரு கல்லும், சிலருக்கு ஒரே நேரத்தில் பல கற்களும் உருவாகும். இந்த பிரச்னை கடுமையாகும்போது அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் பித்தப்பையில் கல் உருவாகும்போது எவ்வித அறிகுறிகளும் ஏற்படாது. ஆனால் அதிகமாகும்போது அது சில அறிகுறிகளை காட்டும்.

பித்தப்பை கல் அறிகுறிகள்

வயிற்றின் மேல்புறத்தில் கடும் வலி.

வயிறின் மத்தியிலும் கடும் வலி.

பின்புறத்தில் வலி

வலது கையில் வலி

வாந்தி

வலி சில நிமிடங்கள் முல் பல மணி நேரங்கள் வரை நீடிக்கலாம்.

வலி அதிகமாகும்போது, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்போது உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

பித்தப்பை கற்களுக்கு வீட்டு தீர்வு

பித்தப்பையில் சேரும் அதிகப்படியான கொழுப்பே கல்லாக மாறுகிறது. அதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது உங்களுக்கு அறுவைசிகிச்சை வரை கொண்டு சென்றுவிடும். எனவே நீங்கள் பித்தப்பையில் கற்கள் வராமல் பாதுகாக்கவேண்டும்.

பித்தப்பையில் கற்கள் வராமல் பாதுகாக்க வேண்டுமெனில், நீங்கள் அதற்கு உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் சில மாற்றங்களை கட்டாயம் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்துடன், பித்தப்பையில் கற்களும் சேராமல் இருக்கும்.

பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு காரணம் நாம் உமிழ்நீருடன் சேர்த்து உணவை மென்று உண்ணாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது ஆகும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கெல்லாம் நேரமின்றி சவித்து சாப்பிடாமல் விழுங்குகிறோம். எனவே பித்தப்பையில் உள்ள கற்களை கரைத்து ஓடச் செய்ய புட்டு உதவுகிறது.

ஏனெனில் புட்டை நீங்கள் அப்படியே விழுங்க முடியாது. அதை சாப்பிட உங்களுக்கு கட்டாயம் நாவில் உமிழ்நீர் சுரக்கவேண்டும். எனவே பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் ராகி, கோதுமை, சிவப்பு அரிசி, சம்பா அரிசி என வகைவகையான புட்டுகளை சேர்த்து சாப்பிடவேண்டும்.

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு உணவை சவித்து, உமிழ்நீருடன் சேர்த்து சாப்பிடுவதன் நன்மைகளை விளக்கிக்கூறி அவர்களை அவ்வாறு சாப்பிட குழந்தை முதலே பழக்குங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.