Constipation: குளிர்கால மலச்சிக்கலைப் போக்க உதவும் பழங்கள்
குளிர்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும் பழங்கள் குறித்துக் காண்போம்.
மலச்சிக்கல் என்பது குளிர்காலங்களில் அதிகமாகவே ஏற்படுகிறது. இக்காலங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இருமல், சளி போன்ற குளிர்கால நோய்களுக்கு ஆளாகிறோம். தவிர, மலச்சிக்கலும் தொற்றிக்கொள்கிறது.
அப்படி குளிர்காலத்தில் இருக்கும் மலச்சிக்கலைத் தவிர்க்க சில உணவுகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். அப்படி நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய பழங்கள் குறித்துக் காண்போம்.
பெர்ரி: பெர்ரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. இதனால் குளிர்கால மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை அதிகமுள்ளதால் உடலில் இருக்கும் செல் சேதங்களைப் பாதுகாக்கின்றன. பெர்ரியில் இருக்கும் ஆன்டி வைரல் எதிர்ப்பு நோய்த்தொற்றைத்தவிர்க்க உதவும்.
நெல்லி: நெல்லியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் காலைக்கடன் சிக்கலை எளிதில் தீர்க்கின்றன. நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைக்கின்றன. நெல்லிக்காயை சட்னியாக்கி எடுத்துக்கொள்ளலாம். காய்களுடன் சேர்த்து உணவில் சாப்பிடலாம்.
மாதுளை: மாதுளைப் பழத்தில் வைட்டமின் பி, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குளிர்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. தவிர, கர்ப்பகால ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கப் பயன்படுத்தலாம். இதனை பழமாக உண்பதே சிறந்தது.
ஆப்பிள்: ஆப்பிளில் க்வெர்செடின், பெக்டின் ஆகிய தாதுக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் சி,வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதனால் குளிர்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலைத் தடுக்க முடியும்.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி, நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிகளவில் உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் சி ஆக்ஸினேற்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகளைப் பெற்றிருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நார்ச்சத்தின் காரணமாக குளிர்கால மலச்சிக்கல் நீங்குகிறது.
கிவி: இந்தில் இருக்கும் வைட்டமின் சி, பொட்டாசியம் , வைட்டமின் ஈ மற்றும் கே ஆகியவை குழந்தைகளின் புத்திக்கூர்மையை அதிகரிக்கின்றன. இந்த கிவி பழத்தை ஜூஸாக்கி குடித்தால் மலச்சிக்கல் நீங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்