கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடையை குளுகுளுப்பாக்கும் பழங்கள்; ‘பீட் தி ஹீட் வித் தீஸ் ப்ரூட்ஸ்’ அப்படி எவற்றை சாப்பிடணும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடையை குளுகுளுப்பாக்கும் பழங்கள்; ‘பீட் தி ஹீட் வித் தீஸ் ப்ரூட்ஸ்’ அப்படி எவற்றை சாப்பிடணும்?

கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடையை குளுகுளுப்பாக்கும் பழங்கள்; ‘பீட் தி ஹீட் வித் தீஸ் ப்ரூட்ஸ்’ அப்படி எவற்றை சாப்பிடணும்?

Priyadarshini R HT Tamil
Published Apr 16, 2025 07:00 AM IST

கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடைக்காலத்தின் வறட்டியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறீர்களா? கோடையை குளுமையாக்கும் பழங்கள் என்னவென்று பாருங்கள்.

கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடையை குளுகுளுப்பாக்கும் பழங்கள்; ‘பீட் தி ஹீட் வித் தீஸ் ப்ரூட்ஸ்’ அப்படி எவற்றை சாப்பிடணும்?
கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடையை குளுகுளுப்பாக்கும் பழங்கள்; ‘பீட் தி ஹீட் வித் தீஸ் ப்ரூட்ஸ்’ அப்படி எவற்றை சாப்பிடணும்?

தர்ப்பூசணி

தர்ப்பூசணி என்பது கோடையை குளுமையாக்கும் பழங்களுள் ஒன்றாகும். இதில் 92 சதவீதம் தண்ணீர்ச் சத்து உள்ளது. இது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கவல்லது. புத்துணர்வு தரும். உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுப்பதற்கு உதவும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளன. இது உங்கள் சருமம் ஆரோக்கியத்துடனும், பளபளப்புடனும் இருக்க உதவும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் சாறு நிறைந்துள்ளது. இதில் வைட்டமி சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் சாறும் அதிகம், புளிப்புச் சுவையும் கொண்டது. உங்களுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் எப்போதும் வலுவாக இருக்க உதவுகிறது.

வெள்ளரி

வெள்ளரிக்காயை நீங்கள் சாலட்களில் அதிகம் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்க்கு காய் என்ற பெயர் இருந்தாலும் அது பழ வகைதான். இதில் அதிகளவில் தண்ணீர்ச் சத்து உள்ளது. இது உங்கள் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது. இதன் புத்துணர்வு தரும் குணம் உங்கள் உடலுக்கு நல்லது.

பெரிகள்

ஸ்ட்ராபெரி, ப்ளுபெரி மற்றும் ராஷ்பெரிகள் என அனைத்து வகை பெரிகளும் சுவையானவை. இவற்றில் கலோரிகள் குறைவு. இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இதை ஸ்னாக்ஸாக சாப்பிடவும், ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடவும் மிகவும் நல்லது.

தேங்காய்

தேங்காய் தண்ணீர் இயற்கையான பானமாகும். இது உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தைக்கொடுக்கவும், குளுமையாக்கவும் உதவுகிறது. இதில் எலக்ட்ரோலைட்கள் உள்ளன. அது இந்த கடும் கோடை காலத்துக்கு மிகவும் நல்லது.

முலாம் பழம்

முலாம் பழம் இனிப்பான மற்றும் சாறு நிறைந்த பழமாகும். இதில் அதிகம் தண்ணீர்ச்சத்து உள்ளது. இதை நீங்கள் சாப்பிடும்போது அது உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. அது உங்கள் சருமத்துக்கு மிகவும் நல்லது.

மாதுளை

மாதுளை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உங்கள் உடலை குளிர்விக்க ஏற்றது. அமலும் உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கும். கடும் மற்றும் நீண்ட கோடை காலத்தில் உங்கள் உடலை குளிர்விக்க ஏற்றது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் இனிப்பு, புளிப்புச்சுவை கொண்டது. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் உடலை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது.

மாம்பழம்

மாம்பழமும் சுவையான மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். கோடையில் அதிகம் கிடைக்கும். பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. கோடைக் காலத்துக்கு இனிடை கூட்டுகிறது.

எனவே கோடைக் காலத்தில் அதிக பழங்களை வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள். உடலுக்கு ஆற்றலும், நீர்ச்சத்தும் தேவை என்றால் அது பழங்களில் இருந்துதான் பெறவேண்டும். எனவே கோடை காலத்தில் அதிக பழங்களை சாப்பிட்டு உடலுக்கு வலு சேர்த்திடுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.