பழங்களா? பழச்சாறா? அனைத்து சத்துக்களையும் அளவின்றி அள்ளி வழங்க எது சிறந்தது? 7 நன்மைகள் உள்ளது!
அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது பழங்களிலா அல்லது பழச்சாற்றிலா? எது என்று பாருங்கள்.

நீங்கள் பழங்களை அப்படியே சாப்பிடவேண்டுமா அல்லது சாறாக பிழிந்து பருகவேண்டுமா? எது நல்லது என்று பாருங்கள். எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியம் அப்படியே கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பழம் சாப்பிட விரும்பும்போது அவற்றை ஜூஸாக எடுத்துக்கொள்ள அதிகம் விரும்புவீர்கள். ஆனால் அதில் அதிகம் சர்க்கரை இருக்கும். நன்மைகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் முழுப்பழங்களில் சர்க்கரை அதிகம் இருக்காது. மேலும் நன்மைகளும் அதிகம் கொடுக்கும். எனவே பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஜூஸ் செய்து பருகாமல் நீங்கள் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் பழங்களை அப்படியே சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
நார்ச்சத்துகள் அதிகம்
முழு பழங்களில், ஜூஸ்களில் இருப்பதைவிட அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. பழங்களில் உள்ள தோல்கள் மற்றும் அதன் சதைப்பகுதிகளில் அதிகளவில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் ஜூஸாக்கும்போது இதை நாம் நீக்கிவிடுகிறோம்.
கலோரிகள் உட்கொள்ளும் அளவு
பழச்சாறுகளில் அதிகம் கலோரிகள் இருக்கும். சர்க்கரையும் அதிகம் இருக்கும். முழு பழத்தில் குறைவான அளவுதான் கலோரிகள் இருக்கும். உடல் எடையை பராமரிக்க பழங்களை அப்படியே சாப்பிடவேண்டும். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.