பழங்கள் : இந்தப் பழங்களில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு என்ன உதவி செய்கிறது என தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பழங்கள் : இந்தப் பழங்களில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு என்ன உதவி செய்கிறது என தெரியுமா?

பழங்கள் : இந்தப் பழங்களில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு என்ன உதவி செய்கிறது என தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Updated Apr 12, 2025 07:13 AM IST

பழங்கள் : உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவும் பழங்களை நீங்கள் சாப்பிட்டு உடலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள்.

பழங்கள் : இந்தப் பழங்களில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு என்ன உதவி செய்கிறது என தெரியுமா?
பழங்கள் : இந்தப் பழங்களில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு என்ன உதவி செய்கிறது என தெரியுமா?

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொட்டாசியச் சத்துக்கள் உங்களின் தசைகள் நல்ல முறையில் இயங்க உதவக்கூடியவையாகும் மற்றும் இது உடற்பயிற்சியின்போது ஏற்படும் வலிகளைத் தடுக்கக் கூடியவை. இவை உங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கின்றன. இதை நீங்கள் உடற்பயிற்சிக்கு முன்னர் எடுத்துக்கொள்ளும் ஒரு சிறந்த ஸ்னாக்ஸாக சாப்பிடலாம்.

கொய்யாப் பழம்

கொய்யாப் பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. அது உங்கள் தசைகளை சரிசெய்யும் ஒன்றாகும். உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்திக்கும் உதவுகிறது. இந்த கொலாஜென் என்ற புரதம்தான் தசைகளை சரிசெய்ய உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மாதுளை

மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. மாதுளை தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. கடும் உடற்பயிற்சிகளுக்கு பின்னர் உங்களை சோர்வடையச் செய்யாமல் வைக்கிறது. இது இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் என இரண்டுக்கும் உதவுகிறது.

பப்பாளி

பப்பாளியில் பப்பைன் என்ற எண்சைம் உள்ளது.இது புரதச்சத்துக்களை உடைக்க உதவுகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன. தசைகளில் உள்ள புண்களையும் குறைக்கிறது.

பேசன் ஃப்ரூட்

பேசன் ஃப்ரூட்டில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்கிறது. பேசன் ஃப்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்திக்கு அவசியமானது. இது உங்கள் தசைகளை சரிசெய்ய உதவுகின்றன.

அவகேடோ

அவகேடோக்களில் அதிகளவில் ஆரோக்கிய கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இவை உடலுக்கு தேவையான பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களைக் கொடுத்து முழு உடல் ஆரோக்கியம் மற்றும் தசைகளின் இயக்கத்துக்கு உதவுகின்றன.

பெரிகள்

ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரிகள் போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது மற்றும் தசைகளில் ஏற்படும் புண்களைப் போக்குகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது. இது புரதம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் ஒரு எண்சைம் ஆகும். இதில் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன. இது தசைகளின் வளர்ச்சி மற்றும் அவற்றை சரிசெய்யவும் உதவுகின்றன.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சகள், எலுமிச்சைகள் மற்றும் கிரேப் பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.