ஆரோக்கிய உணவுகள்: ஸ்மூத்தி முதல் பான் கேக் வரை.. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பீட்ரூட் ரெசிபிக்கள்.. ட்ரை செய்யுங்க
உடல் எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு, பீட்ரூட் காய்கறி சிறந்த தேர்வாக உள்ளது. அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட் விரைவாக எடை குறைக்க உதவும் என கூறப்படுகிறது. பீட்ரூட் வைத்து ஆரோக்கிய மிக்க பல்வகையான ரெசிப்பிக்கள் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்

ஸ்மூத்தி முதல் பான் கேக் வரை.. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பீட்ரூட் ரெசிபிக்கள்.. ட்ரை செய்யுங்க
உடல் எடை இழப்பு டயட்களில் முக்கியமான பீட்ரூட் இருந்து வருகிறது. இது உடலில் கூடுதல் எடையை குறைக்க உதவுகிறது. அத்துடன் பீட்ரூட் சார்ந்த ரெசிபிக்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. கலோரிகள் குறைவா காய்கறியாக இருக்கும் பீட்ரூட் நார்ச்சத்து மிக்கதாகவும் இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடையிழப்புக்கு உதவுகிறது. 100 கிராம் பீட்ரூட்டில் சுமார் 43 கலோரிகள் உள்ளன. இதில் இருக்கும் இயற்கை நைட்ரேட்டுகள் உடற்பயிற்சியின் போது செயல்திறனை அதிகரிக்கின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
பீட்ரூட்டை வைத்து வழக்கமான பொறியல், கூட்டு, குருமா போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கிய மிக்க சில ரெசிப்பிக்கள் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்