தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pizza Day: ’இத்தாலி முதல் அமெரிக்கா வரை!’ பீட்சாவின் வரலாறு!

Pizza Day: ’இத்தாலி முதல் அமெரிக்கா வரை!’ பீட்சாவின் வரலாறு!

Kathiravan V HT Tamil
Feb 09, 2024 05:15 AM IST

”Pizza Day: இது இத்தாலிய உணவாக இருந்தாலும் அதனை உலகெங்கும் கொண்டு சென்றவர்கள் அமெரிக்கர்கள்தான், பிட்சா அட், டோமினோஸ் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் உலகெங்கிலும் தங்கள் கிளைகளை பரப்பி பீட்சாவை விற்பனை செய்து வருகின்றது”

பீட்சாவின் வரலாறு
பீட்சாவின் வரலாறு

கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக பிட்சா மாறிவிட்டது. உலகெங்கிலும் உள்ள உணவு பிரியர்களின் இதயங்களில் பீட்சாவுக்கு பிரிக்க முடியாத இடம் உண்டு. 

பீட்சாவின் தொடக்கம் 

பீட்சாவின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் ரோமானியர்கள் போன்ற பண்டைய நாகரிகங்களின் வேர்களைக் கொண்டுள்ளது. "பீட்சா" என்ற வார்த்தை முதன்முதலில் இத்தாலியில் இருந்து 10 ஆம் நூற்றாண்டின் லத்தீன் கையெழுத்துப் பிரதியில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகள் நமக்கு கிடைக்கிறது. இருப்பினும், இத்தாலியின் நேபிள்ஸில், 18 ஆம் நூற்றாண்டில், இன்று நாம் அறிந்த பீட்சா வடிவம் பெறத் தொடங்கியது. 

நெப்போலிடன் பகுதியில் பீட்சா ஆனது அதன் மெல்லிய ரொட்டியின் மேற்புறத்தில் தக்காளி, மொஸரெல்லா சீஸ் தூவப்பட்டு தயாரிக்கப்பட்டது. இன்றைக்கு பீட்சா ஆனது வசதியானவர்கள் சாப்பிடும் உணவாக கருதப்பட்டாலும், அந்த காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உணவாகவே பீட்சா இருந்தது. 

இத்தாலி முதல் அமெரிக்கா வரை!

இத்தாலிய குடியேறியவர்கள் உலகம் முழுவதும் பரவியதால், அவர்கள் தங்கள் சமையல் மரபுகளை தங்கள் குடியேறும் நாடுகளுக்கும் கொண்டு சென்றனர். அதில் அவர்களின் பிரியமான பீட்சாவும் அடங்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

அமெரிக்காவில், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பீட்சா பரவலான பிரபலத்தைப் பெற்றது. குறிப்பாக நியூயார்க் மற்றும் சிகாகோ போன்ற இத்தாலிய குடியேற்ற மக்களைக் கொண்ட நகரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. காலப்போக்கில், உள்ளூர் சுவைகள் மற்றும் பொருட்களைப் பிரதிபலிக்கும் வகையில் பீட்சாக்கள் உருவாக்கப்பட்டன. 

பீட்சா தினம் 

ஆண்டுதோறும் பிப்ரவரி 9 ஆம் தேதி கொண்டாடப்படும் பீட்சா தினம், இந்த பிரியமான உணவிற்கும், உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பீட்சா பிரியர்களுக்கு மகிழ்ச்சிக்குரியதாக மாறி உள்ளது. 

2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பீட்சா தினம் கொண்டாடப்பட்டாலும், இதனை யார் தொடங்கி வைத்தது என்பது தெரியவில்லை. இந்த தினத்தன்று, உலகெங்கிலும் உள்ள பீட்சா பிரியர்களை கவர்வதற்காக சிறப்பு சலுகைகளும், விற்பனைகளும் செய்யப்படுகின்றன. 

இது இத்தாலிய உணவாக இருந்தாலும் அதனை உலகெங்கும் கொண்டு சென்றவர்கள் அமெரிக்கர்கள்தான், பிட்சா அட், டோமினோஸ் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் உலகெங்கிலும் தங்கள் கிளைகளை பரப்பி பீட்சாவை விற்பனை செய்து வருகின்றது.