Fried rice : சாதம் மிஞ்சிவிட்டதா? அதை வைத்து ஈசியாக செய்யலாம் பன்னீர் ஃப்ரைட் ரைஸ்!
Fried rice : மிஞ்சிய சாதத்திலே பன்னீர் ஃப்ரைட் ரைஸ் ஈசியா செய்யலாம். வீட்டில் உள்ள மசாலாக்களே போதும். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
இதில் புரதம், நார்ச்சத்து என உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இதை பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு நீங்கள் கொடுத்து விடலாம்.
மேலும் பன்னீர் கேன்சரை எதிர்த்து போராட உதவுகிறது. பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. எடை குறைப்புக்கு உதவுகிறது. செரிமான உறுப்புகள் செயல்பட உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என பன்னீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 150 கிராம்
அரைவேக்காட்டில் வேக வைத்த பாஸ்மதி அரிசி – 2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
முட்டைகோஸ் – அரை கப் நன்றாக நறுக்கியது
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு – அரை ஸ்பூன்
மல்லித்தழை – கைப்பிடி அளவு
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
செய்முறை
காய்கறிகள், பன்னீர் என அனைத்தையும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி, முட்டைகோஸ் சேர்த்து நன்றாக அனைத்து வெந்தவுடன், சிறிது சோயா சாஸ் மற்றும் மசாலாக்கள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
இதில் வேகவைத்த சாதம், பன்னீர் சேர்த்து நன்றாக கலக்கி, அதிக தீயில் 5 நிமிடம் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். இதில் கொத்தமல்லித்தழை, தேவைப்பாட்டால் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கி சுடசுட, மணக்கும் பன்னீர் ஃப்ரைட் ரைஸை பரிமாறவேண்டும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை மீந்து போன சாதத்திலே செய்து முடித்துவிடலாம். ஆனால் ஃப்ரைட் ரைஸ் என்றாலே அதை நீங்கள் பாஸ்மதி அரிசியில்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் அது சுவை நிறைந்ததாக இருக்கும்.
பன்னீரில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்
100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.
பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.
பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது.
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பன்னீரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்