தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Fried Chicken Biriyani Happy Sunday Fried Chicken Biryani Delicious To Eat And Bake

Fried Chicken Biriyani : சண்டேவை ஹாப்பியாக்கும்! ஃப்ரைட் சிக்கன் பிரியாணி! சுடச்சுட சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Mar 24, 2024 11:41 AM IST

Fried Chicken Biriyani : சிக்கனை வறுத்து செய்யும்

Fried Chicken Biriyani : சண்டேவை ஹாப்பியாக்கும்! ஃப்ரைட் சிக்கன் பிரியாணி! சுடச்சுட சாப்பிட சுவை அள்ளும்!
Fried Chicken Biriyani : சண்டேவை ஹாப்பியாக்கும்! ஃப்ரைட் சிக்கன் பிரியாணி! சுடச்சுட சாப்பிட சுவை அள்ளும்!

ட்ரெண்டிங் செய்திகள்

பாஸ்மதி அரிசி - 2 கப்

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் - 1

அன்னாசிப்பூ – 1

பிரியாணி இலை - 1

சோம்பு – ஒரு ஸ்பூன்

எலுமிச்சைபழச்சாறு – ஒரு பழம்

வெங்காயம் – 10 மெல்லியதாக நறுக்கியது

தக்காளி - 8 நறுக்கியது (சிறியது)

இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 நறுக்கியது

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை – 2 கொதுது

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு

செய்முறை -

சிக்கனில் எலுமிச்சை பழசாறு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் கலந்து 30 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

அடுத்து அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவேண்டும்.

சிக்கன் நிறம் மாறியதும் அதில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

பின்னர் சிக்கன் துண்டுகள் மற்றும் வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவேண்டும்.

பின்னர் அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மூடி வைத்து 3 நிமிடம் வேகவிடவேண்டும்.

அடுத்து வேகவைத்த சிக்கன் தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

பின்னர் பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவேண்டும்.

நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்துகலந்து இறக்கி வைக்கவேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து பொரிய விடவேண்டும்.

அடுத்து தண்ணீர், உப்பு சேர்த்து தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து மூடி வேகவிடவேண்டும்.

கடைசியாக நெய் ஊற்றி தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், வறுத்த முந்திரி பருப்பு அதின் மேல் வேகவைத்த சாதத்தை வைத்து அழுத்தி அதை ஒரு தட்டில் கவிழ்த்து பிறகு சிறிதளவு சிக்கன் மசாலாவை வைத்து சூடாக பரிமாறவேண்டும்.

ஃப்ரைட் சிக்கன் பிரியாணி தயார். சுடச்சுட பரிமாறினால் சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா மட்டுமே போதும். தேவைப்பட்டால் எந்த கிரேவியும் செய்துகொள்ளலாம்.

இந்த பிரியாணியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

WhatsApp channel

டாபிக்ஸ்