தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  French Toast Cheese French Toast A Super Evening Snack That Kids Love

French Toast : சீஸ் பிரஞ்ச் டோஸ்ட்; குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 10:20 AM IST

French Toast : சீஸ் பிரஞ்ச் டோஸ்ட்; குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

French Toast : சீஸ் பிரஞ்ச் டோஸ்ட்; குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!
French Toast : சீஸ் பிரஞ்ச் டோஸ்ட்; குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

பால் – அரை கப் காய்ச்சி ஆற வைத்தது

உப்பு – கால் ஸ்பூன்

மிளகு தூள் – கால் ஸ்பூன்

வெண்ணெய் – சிறிதளவு

பிரட் துண்டுகள் – 4

சீஸ் துண்டுகள் – 2

செய்முறை 

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி வெண்ணெய் தடவி, வெண்ணெய் உருகியதும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சூடான தோசைக்கல்லில் வைக்கவேண்டும்.

ஒரு நிமிடத்திற்கு பின்னர் பிரட்டை திருப்பி விட்டு அதன் மீது ஒரு சீஸ் ஸ்லைஸை வைத்து, அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்கவேண்டும்.

ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி, பிரட்டின் ஓரங்களில் வெண்ணெய் தடவவேண்டும்.

வெந்த பிரட்டின் மீது சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்கவேண்டும்.

ஓரங்களில் வெண்ணெய் தடவி, சான்விச்சை மறுபுறம் திருப்பவேண்டும்.

தோசைக்கல்லை மூடி வைத்து குறைந்த தீயில் 3 நிமிடம் மட்டும் வேகவிடவேண்டும்.

சான்விச்சை மறுபுறம் திருப்பி மூடி வைத்து 2 நிமிடங்கள் வேகவிடவேண்டும்.

சீஸ் பிரஞ்சு டோஸ்ட் தயார். இரண்டாக வெட்டி சூடாக பரிமாறவேண்டும்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

சீஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சீஸில் கால்சியம், புரதம் உள்ளது. இதில் சாச்சுரேடட் ஃபேட்ஸ் மற்றும் சோடியமும் உள்ளது. இதனால் இதை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்ம 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் பிரபலமான உணவுகளில் ஒன்றுதான் சீஸ். இதன் நுகர்வு 1970 முதல் 2009க்குள் மும்மடங்காக உயர்ந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எலும்பு ஆரோக்கியம்

சீஸில் கால்சியம், புரதம், மெக்னீசியம், சிங்க், வைட்டமின் ஏ, டி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எலும்பு ஆரோக்கியம் வலுப்பெற உதவுகிறது.

பல் ஆரோக்கியம்

பற்களின் ஆரோக்கியம் மற்றும் வலுப்பெறுவதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. சீஸ் கால்சியம் சத்து நிறைந்தது. சீஸில் கால்சியச்சத்து அதிகம் உள்ளது. இது பல் ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது. இது பற்களில் கேவிட்டி பிரச்னைகளை எதிர்த்து போராட உதவுகிறது.

ரத்த அழுத்தம்

சீஸ் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் சோடியம் சத்து குறைவாக உள்ள சீஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஸ்விஸ் சீஸில் இவை குறைவாக உள்ளது. காட்டேஜ் சீஸ், பார்மேஷன் சீஸ், ஃபீட்டா சீஸ், கோட்ஸ் சீஸ் ஆகியவற்றிலும் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது.

ரத்த நாளங்களின் ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது

பால் பொருட்களில் அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வயோதிகம் தொடர்பான நரம்பியல் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. ‘

குடல் நுண்ணுயிர்கள் மற்றும் கொழுப்பு

குடலில் நல்ல நுண்ணுயிர்கள் உருவாவதற்கு சீஸ் உதவுகிறது. இது ரத்த கொழுப்பு அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரேக்கியமான உடல் எடை அதிகரிக்க உதவுகிறது

உடல் எடை அதிகமானவர்களுக்கு கால்சியச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சீஸ் உடலுக்கு தேவையான கால்சிய சத்தை வழங்குகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல தேர்வாக சீஸ் உள்ளது.

ஒமேகா ஃபேட்டி – 3 ஆசிட்

சில சீஸ்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. ஆல்பைன் புல்களை சாப்பிட்டு வளரும் மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ஆரோக்கிய செல்கள்

செல்களுக்கு புரதச்சத்து தேவை. ஒரு பீஸ் செடார் சீஸில் 7 கிராம் புரதச்சத்து உள்ளது. ஒருவரின் வயது, எடை மறறும் செயல்திறன் ஆகியவற்றைப் பொருத்து ஒருவருக்கு தேவைப்படும் புரதச்சத்தின் அளவு உள்ளது. எனவே உங்களுக்கு தேவையான அளவை தெரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் சீஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சீஸ் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

WhatsApp channel

டாபிக்ஸ்