மணமணக்கும் மீன் பிரியாணி; மணம் மயக்கும் சுவையில் செய்வது எப்படி என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மணமணக்கும் மீன் பிரியாணி; மணம் மயக்கும் சுவையில் செய்வது எப்படி என்று பாருங்கள்!

மணமணக்கும் மீன் பிரியாணி; மணம் மயக்கும் சுவையில் செய்வது எப்படி என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 08, 2024 10:52 AM IST

மணமணக்கும் மீன் பிரியாணி, மணம் மயக்கும் சுவையில் செய்வது எப்படி என்று பாருங்கள். பிரியாணி பிரியர்களுக்கு இது மேலும் ஒரு வரப்பிரசாதம்.

மணமணக்கும் மீன் பிரியாணி; மணம் மயக்கும் சுவையில் செய்வது எப்படி என்று பாருங்கள்!
மணமணக்கும் மீன் பிரியாணி; மணம் மயக்கும் சுவையில் செய்வது எப்படி என்று பாருங்கள்!

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப்

மீன் – ஒரு கிலோ

பெரிய வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

தக்காளி – 5

பச்சை மிளகாய் – 4

முழு கரம் மசாலா

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலம் – 1

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

தயிர் – ஒரு கப்

மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

சோம்புத் தூள் – 2 ஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத் தூள் – 2 ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் – ஒரு கப்

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

புதினா இலை – ஒரு கப்

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முள் இல்லாத மீனை வாங்கி நன்றாக சுத்தம் செய்து சதுரத்துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்வேண்டும்.

சுத்தம் செய்த மீனை மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டிக்கொள்ளவேண்டும். அதை ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்து எடுக்கவேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது, சோம்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் தக்காளி, கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும். பின்னர் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவேண்டும்.

பின்னர் தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடம் வேகவிடவேண்டும். பின்னர் பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவேண்டும்.

கொதித்த பின் மீனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவேண்டும். பின்னர் அரிசியைக் களைந்து குருமாவில் போட்டு மூடி 20 நிமிடம் சிம்மில் வேக விடவேண்டும். வெந்த பின்னர் நன்றாகக் கிளறிவிட்டு, மீன் துண்டுகளை அதில் போடவேண்டும். பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவேண்டும். கமகமக்கும் மீன் பிரியாணி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடியே போதும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.