தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Foods Which Protects From Summer Heat

Healthy Vegetables: கோடை சூட்டிலிருந்து உங்களை காக்கும் காய்கறிகள்!

I Jayachandran HT Tamil
Mar 30, 2023 10:45 PM IST

கோடை வெப்பத்திலிருந்து உங்களை காக்கும் காய்கறிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை சூட்டிலிருந்து உங்களை காக்கும் காய்கறிகள்
கோடை சூட்டிலிருந்து உங்களை காக்கும் காய்கறிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் பிரச்னைகளை எளிதாக சமாளிப்பதற்கு சில காய்கறிகள் உள்ளன. அவை இயற்கையிலேயே உடல் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடியவை.

அவற்றை இந்தக் கோடைக்காலத்தில் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத் தாக்கத்திலிருந்து உங்களை குளிர்வித்து கொள்ள உதவியாக இருக்கும்.

புடலங்காய்

கோடையில் ஏற்படும் சுவாசக்குழாய் தொடர்பான தொற்றுகளைத் தவிர்க்க புடலங்காய் உதவும். அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகளையும் புடலங்காய் சரிசெய்யும் உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதோடு, சருமப் பராமரிப்புக்கும் உதவும்.

கத்திரிக்காய்

இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருப்பதால், கத்திரிக்காய் ஆன்டி-ஆக்ஸிடன்டாகச் செயல்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி, கே 1, பி9 சத்துகள் நிறைந்திருப்பதால், அது ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. 95 சதவிகிதம் நீர் சத்து நிறைந்தது, நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு மற்றும் அது தொடர்பான அனைத்து பிரச்னைகளை சரியாகும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது கோடைக்காலத்தில் மிக அதிகமாகவே கிடைக்கிறது உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதோடு உணவு செரிமான பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாகும். சாலடு செய்து சாப்பிடலாம்

பாகற்காய்

கோடையில் சருமத்தில் கொப்பளங்கள், தடிப்பு, படர்தாமரை போன்றவை ஏற்படும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளை மிக எளிதாகத் தவிர்க்கலாம். பாகற்காய் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கேரட்

ஆண்டு முழுவதும் இந்த காய்கறி கிடைக்கும். ஆனால் கோடைக்காலத்தில் அதிக அளவில் கிடைக்கிறது. கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது, மேலும் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்க கூடியது.

நெல்லிக்காய்

இது உடல் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்தைத் தரக்கூடியது நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் கனிம, நார்ச்சத்துக்கள் உள்ளன. உடலுக்கு வலுவூட்டும் சக்தி படைத்தது.

WhatsApp channel

டாபிக்ஸ்