தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Foods To Avoid For Kidney Problem: உஷார்! சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்

Foods to Avoid for Kidney Problem: உஷார்! சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 12, 2024 03:00 PM IST

சிறுநீரக கல், நோய் பாதிப்பு இருப்பவர்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலும், பின்பற்றும் டயட்டில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இதை சரியாக செய்தாலே சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்.

சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்
சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிறுநீரகம் தான் உடலில் முக்கியமான வடிகட்டுதல் அமைப்பாக செயல்படுகின்றன. கழிவுப் பொருள்கள் மற்றும் அதிகப்படியான திரவத்தை ரத்தத்தில் இருந்து நீக்கி சிறுநீராக உற்பத்தி செய்யும் வேலையை சீறுநீரகங்கள் செய்கின்றன.

இதில் சிறுநீரகம் ரத்தத்தை சரியாக வடிகட்டத் தவறினால், உடல்நலத்தில் பல்வேறு விதமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட பாதிப்புகளின் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.