Thyroid: தைராய்டை கட்டுப்படுத்தும் உணவுகள்.. எதைச் சாப்பிடலாம்.. எதைச் சாப்பிடக்கூடாது!
Thyroid: தைராய்டை கட்டுப்படுத்தும் உணவுகள்.. எதைச் சாப்பிடலாம்.. எதைச் சாப்பிடக்கூடாது என அறியலாம்.

Thyroid: தைராய்டை கட்டுப்படுத்தும் உணவுகள்.. எதைச் சாப்பிடலாம்.. எதைச் சாப்பிடக்கூடாது! (PC: Freepik.com)
Thyroid: இன்றைய காலத்தில் தைராய்டு என்பது பலரும் சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்னைகளில் ஒன்று. உடல் நலப் பிரச்னை இருந்தாலும் நமது வாழ்க்கை முறையை மாற்றுவது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்துவதும் முக்கியம்.
தைராய்டு உள்ளவர்களுக்கு வைட்டமின் பி சத்து மிக முக்கியம். ஏனெனில், அவை தைராய்டு செயல்பாடு மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
சர்க்கரையில் செய்த உணவுகள், உங்கள் ரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்கும். இது உடலின் ஹைபோதாலமிக் பிட்யூட்டரி செயல்பாட்டை பாதிக்கிறது. இதில் தைராய்டு ஹார்மோன்களும் உள்ளன.