தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bad Cholesterol : கல்லீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்.. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளதா.. முகத்தில் தெரியும் அறிகுறிகள்!

Bad Cholesterol : கல்லீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்.. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளதா.. முகத்தில் தெரியும் அறிகுறிகள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 30, 2024 06:00 AM IST

Bad Cholesterol : ஆளி விதைகளை சாப்பிடுங்கள். அவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம். சியா விதைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதை வழக்கமாக்குங்கள். பூசணிக்காய், எள், கருப்பட்டி இவற்றை அளவோடு சாப்பிடுங்கள்.

கல்லீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்.. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளதா.. முகத்தில் தெரியும் அறிகுறிகள்!
கல்லீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்.. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளதா.. முகத்தில் தெரியும் அறிகுறிகள்! (Pixabay)

முகத்தில் காணப்படும் அறிகுறிகள்

முகத்தில் தோல் மஞ்சள் நிறமாக மாறினால், இரத்த ஓட்டம் இல்லாததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இப்படி கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் தெரிய ஆரம்பிக்கும்.

முகத்தில் சிறிய புடைப்புகள் தோன்றும். அவை எந்த வலியையும் ஏற்படுத்தாது. வலி இல்லாத காரணத்தால் தானே குறையும் என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த புடைப்புகள் பொதுவாக கண்களைச் சுற்றி உருவாகின்றன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறிக்கின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கண்களைச் சுற்றி வெளிர் மஞ்சள் நிற சொறி மற்றும் மஞ்சள் நிற பருக்கள் தோன்றும். இவை கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்ததற்கான அறிகுறியாகக் கருதப்பட வேண்டும்.

முகத்தில் வீக்கம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இந்த வீக்கம் ஏற்படலாம். இதனால் முகம் வீங்கியிருக்கும். இல்லையெனில், தோல் முற்றிலும் வறண்டு போகும். இப்படி சருமம் கெட்டுப் போனால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதும் ஒரு காரணம்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க உணவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நொறுக்குத் தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை குறைவாக சாப்பிடுங்கள். ஒவ்வொரு இரவும் கட்டாயம் எட்டு மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நட்ஸ் சாப்பிட வேண்டும். தினமும் ஆளி விதைகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் நார்ச்சத்து அதிகம். சியா விதைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதை வழக்கமாக்குங்கள். பூசணிக்காய், எள், கருப்பட்டி இவற்றை அளவோடு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வது தடுக்கப்படும்.

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டும். கல்லீரலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும்போதுதான் தோல் மஞ்சள் நிறமாக மாறும். கண்களில் வெள்ளை புள்ளிகள் தோன்றும். அப்படி விட்டால் மஞ்சள் நிறமாக மாற வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். தினமும் பலமுறை நம் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொள்ளும் நாம் இந்த மாதிரி அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9