தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Foods One Must Avoid Consuming With Tea

Tea: டீயுடன் சேர்த்து எடுக்கவே கூடாத உணவுகள் என்னென்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 29, 2024 07:06 PM IST

அதிக மசாலா கொண்ட உணவுளை டீயுடன் சேர்த்துக்கொள்ளும் போது, ஜீரண பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

 டீயுடன் எடுக்கக்கூடாத உணவுகள்!
டீயுடன் எடுக்கக்கூடாத உணவுகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதிக மசாலா மற்றும் பொறிக்கப்பட்ட உணவுகளுடன் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், அசிடிட்டி உருவாகும்.

அதிக இனிப்பான உணவுகளான கேக் உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது, அதனுடன் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், அது விரைவாக நம்முடைய இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

சிப்ஸ், உப்பு நிறைந்த நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது நாம் எடுக்கும் சோடியத்தின் அளவு அதிகமாகும். இவற்றுடன் டீயை எடுத்துக்கொள்ளும் போது வீக்கம், இரத்த அழுத்தம் உடனடியாக அதிகரித்தல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அதிக மசாலா கொண்ட உணவுளை டீயுடன் சேர்த்துக்கொள்ளும் போது, ஜீரண பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

சிட்ரஸ் அமிலம் கொண்ட ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களுடனும் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம் அதுவும் அசிடிட்டியையும், வயிற்றில் தேவையில்லாத அசெளகரியமான சூழ்நிலையையும் உருவாக்கும்.

சிவப்பு இறைச்சி உணவுகளை டீயுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுவும் வயிற்றில் பிரச்சினையை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.

பன்னீர்கேக், ஐஸ்க்ரீம் உள்ளிடட உணவுகளுடன் நாம் டீயை எடுத்துக்கொள்ளும் போது, அதில் சேர்க்கக்கூடிய பொருட்கள் வயிற்றில் பிரச்சினையை உருவாக்கும்.

பதப்பட்ட உணவுகளுடன் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், அதனுடன் சேர்க்கப்படும் சில பொருட்கள் டீயுடன் கலக்கும்போது வயிறில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்