தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Food Recipe How To Prepare Yummy Creamy Chicken Gravy

Food Recipe : யம்மீ…. கிரீமி சிக்கன் மில்க் முந்திரி குருமா…. செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Mar 27, 2023 02:31 PM IST

Chicken Gravy : குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் குருமா இது. சோறு, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, புரோட்டா என எல்லாவற்றிற்கும் பக்கா காம்பினேஷன் இது. உங்கள் வீட்டு விருந்தில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ரெசிபி.

சிக்கன் கிரேவி
சிக்கன் கிரேவி

ட்ரெண்டிங் செய்திகள்

முந்திரி மசாலாவிற்கு : நறுக்கிய பெரிய வெங்காயம் -2, ஆயில் - 50 மிலி, முழு முந்திரி - 30

சிக்கன் சமைக்க : ஆயில் - 100மிலி,  பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2, மல்லித்தூள் - ஒன்றரை டீ ஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,  சாட் மசாலா - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்,  பச்சைப்பால் - 100மிலி, டபுள் க்ரீம் - 60 மிலி, கசூரி மேத்தி - 1tbs. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 tbs. 

சமைக்கும் முன் 1 : தக்காளியை சிறிது நீர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்து தனியே வைக்கவும்! 

2 : ஒரு வாணலியில் 50 மிலி ஆயில் விட்டு நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து அது கண்ணாடி போல் வதங்கியதும் முந்திரிகளை இதில் போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும். 6 நிமிடங்கள் இதை மிதமான தீயில் வறுத்து இந்தக் கலவையை மிக்ஸியில் போட்டு சிறிது நீர் விட்டு நன்கு பேஸ்டாக அரைத்து வைக்கவும்.

செய்முறை : ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு உப்பு அனைத்தையும் நன்கு குழைவாக கரைத்து பின்னர் 1 கிலோ சிக்கனை அதில் போட்டு இக்கலவை சிக்கன் முழுவதும் வரும்படி நன்கு பிரட்டி பாத்திரத்தை மூடி போட்டு மூடி ஒரு மணி நேரம் தனியே வைத்துவிடவும்.

ஒரு மணி நேரத்திற்கு பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, ஊற வைத்த சிக்கனை இதில் போட்டு அடுப்பை மிதமாக எரியவிட்டு இந்த சிக்கனில் இருக்கும் நீர் வற்றும் வரை சமைக்கவும் 3-4 நிமிடங்களில் நன்கு வற்றியவுடன், சிக்கனை தனியே எடுத்து வைத்துவிடவும்.  இந்த வாணலியில் 100 மிலி ஆயில் விடவும். அது சூடானதும் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பிறகு இதில் அரைத்த தக்காளி பேஸ்ட்டை சேர்த்து கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விட்டு 5 நிமிடங்கள் வரை ஆன பின், மிளகாய், மல்லி, கரம் மசாலா, சாட் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கலந்துவிடவும். 

கலந்த பின் 100மிலி பச்சைப் பாலை ஊற்றி கிளறவும். இது குமிழ் குமிழாக வரும் வரை கொதித்ததும் அரைத்த முந்திரிக் கலவையை இதில் சேர்த்து நன்கு கிளறவும். இது நன்கு பால்கோவா போல இருக்கும் இதில் 50 மிலி டபுள் க்ரீமை ஊற்றி கலந்து சிக்கன் துண்டுகளை இதில் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

நன்கு இதை கலந்ததும், கசூரி மேத்தியை இரு கைகளுக்கு இடையில் வைத்து நசுக்கி (நம்பியார் ஸ்டைலில்) அதை சிக்கன் மீது பரவலாக தூவி 3 நறுக்கிய பச்சை மிளகாய்களை போட்டு நன்கு கலந்து மூடி போட்டு மூடிவிடவும். அடுப்பை குறைவாக எரியவிட்டு 20 முதல் 25 நிமிடங்கள் சமைக்கவும். அதன் பின்னர் மூடியைத் திறக்க மேலே சிவப்பாய் எண்ணெய், பிரிந்து செழிப்பாக சிக்கன் வெந்திருக்கும். 

அதை நன்கு ஒரு கிளறு கிளறி நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித் தழைகளைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு மீதி 10 மிலி டபுள் க்ரீமை சிக்கன் மீது ஊற்றவும்! சிக்கன், பால் மற்றும் முந்திரி மணம் கமகமக்க அற்புதமான ருசியில் க்ரீமி சிக்கன் மில்க் முந்திரி குருமா ரெடி. 

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் குருமா இது.  சோறு, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, புரோட்டா என எல்லாவற்றிற்கும் பக்கா காம்பினேஷன் இது. உங்கள் வீட்டு விருந்தில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ரெசிபி.  

செய்முறை வழங்கியவர்கள் – ருசி 6 முகநூல் குழு, வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் பிரேம். 

WhatsApp channel

டாபிக்ஸ்