Tamil News  /  Photo Gallery  /  Food Items That Are Probably Giving You A Headache: Nutritionist Explains

Headache Making Food: தீராத தலைவலியை தரும் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

24 November 2022, 14:06 IST I Jayachandran
24 November 2022, 14:06 , IST

தலைவலி பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டத்தில் தலைவலி ஏற்படுகிறது. அடிக்கடி உண்டாகும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சில உணவுகள் தலைவலியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

மன மற்றும் உடல் அழுத்தம், மரபணு காரணிகள் தலைவலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் தலைவலிக்கு காரணம் நாம் உண்ணும் உணவுதான் என்கிறா ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல். அவர் கூறும் இந்த உணவுகளைத் தவிர்த்தால் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

(1 / 7)

தினமும் 60 மி.லி. சிவப்பு ஒயின் அருந்தினால் இதயத்துக்கு நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு சிவப்பு ஒயின் அருந்தினால் கடும் தலைவலியையும் ஏற்படுத்தும். அதன் விளைவு நபருக்கு நபர் மாறுபடும். தலைவலி வந்தால் சிவப்பு ஒயின் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

(2 / 7)

அதிக சாக்லேட் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தும், ஏனெனில் அதில் உள்ள டைரமைன் என்ற நொதி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. பீபி உயர்ந்தால் கட்டாயம் தலைவலிக்கும்.

(3 / 7)

செயற்கை இனிப்புகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை அஸ்பார்டேம் எனும் நொதியை முளையில் குறைக்கிறது. இதனால் மூளையின் சுறுசுறுப்புக்கான டோபமைன் சுரப்பு அளவைக் குறைத்து தலைவலியைத் தூண்டுகிறது. பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான் செயற்கை இனிப்புகளை சேர்க்கினறனர். அவர்களுக்கு இதனால் தலைவலி உண்டாகலாம் என்பதால் தவிர்த்து விடுங்கள்

(4 / 7)

பால் திடமான ஊட்டச்சத்தாகும். ஆனால் சிலருக்கு பிறவியில் இருந்தே பாலில் உள்ள லாக்டோஸ் அலர்ச்சியை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு ஏற்படும். உங்களுக்கு லாக்டோஸ் அலர்ச்சி இருந்தால், தலைவலிக்கு பால் ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம்.

(5 / 7)

சிட்ரஸ் பழங்களில் ஆக்டோபமைன் உள்ளது, இது பொதுவான தலைவலியைத் தூண்டும். அமிலத்தன்மை கொண்ட பழங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் திராட்சைப்பழம் மற்றும் ஆரஞ்சு சாப்பிடுவதால் தலைவலி ஏற்படலாம்.

(6 / 7)

பதப்படுத்தப்பட்ட மீன், மட்டன், கோழி, கடல் உணவுகள், மாட்டிறைச்சிகளும் தலைவலியை ஏற்படுத்தும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்