Exam Tips: படிக்கும் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் உணவுகள் கொடுக்கலாமே? நினைவாற்றலை பெருக்கும் உணவு வகைகள் இதோ
தேர்வுக்ககாக தயாராக வரும் குழந்தைகள், பள்ளி மாணவர்களை உற்சாகம் அளிக்கும் விதமாகவும், புத்துணர்ச்சியை தந்து மூளை செயல்பாட்டை வெளிப்படுத்த உதவும் உணவுகளை தருவதன் மூலம் அவர்களுக்கு பயமும், பதற்றமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்
![நினைவாற்றலை பெருக்கும் உணவு வகைகள் நினைவாற்றலை பெருக்கும் உணவு வகைகள்](https://images.hindustantimes.com/tamil/img/2024/03/14/550x309/memory_increasing_ood_1710417438243_1710417447397.jpg)
தேர்வு நேரம் தொடங்கிவிட்டதால் பள்ளி படிக்கும் குழந்தைகள், சிறுவர்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களை சிறிது காலம் ஓரங்கட்டி வைத்துவிட்டு படிப்பில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
தேர்வுகளை நினைத்து உண்டாகும் பயம், பதற்றம் போன்றவை பலருக்கு அறிவிக்கப்டாத நோயாக மாறி விடுகிறது. தேர்வு நேரத்தில் முழுவமையாக படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த நேரிடும். இதுபோன்ற சமயங்களில் பதட்டம் காரணமாக சிலர் உணவுகள் கூட சரியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அவ்வாறு செய்வதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் உடலில் சோர்வு அடைவதோடு, மனதிலும் சோர்வு உண்டாகும். இதனால் தேர்வையும் சரியாக எதிர்கொள்ள முடியாமல் போகும்.
தேர்வு பதற்றத்தை போக்கும் உணவு முறை
தேர்வு நேரத்தில் நாம் கடைப்பிக்கும் உணவு முறையின் மூலம் பதற்றத்தை குறைத்து, நினைவாற்றலையும் பெருக்கலாம்.
அந்த வகையில், நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது என்கிற கூற்று பொதுவாகவே உண்டு. அதன்படி தேர்வு நேரத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு தவறாமல் ஆப்பிள் கொடுக்க வேண்டும். இதில் இடம்பிடித்திருக்கும் அசிடைல்கோலின் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது
பருப்பு வகை உணவுகள்
வேர்க்கடலை, பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது. இதை சீராக சாப்பிடு கொடுப்பதன் மூலம் அறிவாற்றல் செயல்பாடு மேம்படும்.
குறிப்பாக வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுவதால் அவர் அழற்சியை எதிர்த்து, பதற்றத்தை குறைக்க உதவுகிறது
தயிர்
தயிரில் கால்சியம், நல்ல பாக்டீரியா அதிகமாக உள்ளது. அத்துடன் தேர்வு நேரத்தில் செரிமான பிரச்னை வாயு தொல்லை வராமல் தடுக்கிறது. இதில் இருக்கும் லேக்டோபாசிலஸ் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது
முட்டை
முட்டையை தினமும் அவித்து சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துகளை பெறலாம். இதில் இருக்கும் வைட்டமின் பி12 உடனடி சக்தியை கொடுத்து, புத்தி கூர்மையை அதிகரிக்கிறது. முட்டையில் இருக்கும் புரதம் நோய் எதிர்ப்பு அமைப்பை சீராக வைக்க உதவுகிறது
கீரை வகைகள்
வைட்டமின் கே, பி6, பி12 நிறைந்திருக்கும் கீரைகள் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. கீரை போல் பச்சை காய்கறி வகையாக இருக்கும் ப்ராக்கோலி நரம்பு செல்களை பாதுகாக்கிறது. இதனால் மூளை திறனை சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
மூளை நலனை பாதுகாக்கும் மற்றொரு உணவாக பரங்கிக்காய் விதை உள்ளது. நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்த காய்கறி விதையாக இது உள்ளது.
டார்க் சாக்லெட்
சர்க்கரை மிகவும் குறைவாக இருக்கும் டார்க் சாக்லெட்டுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இதய செயல்பாட்டை சீராக வைக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் எண்டார்பின், டிரிப் சோபான் ஆகியவை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதால், மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கும்.
எலும்பு சூப்
தேர்வு நேரத்தில் படிப்பது, நினைவாற்றலை பெருக்குவது ஒரு புறம் இருந்தாலும் சீரான தூக்கம் என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே எலும்பு சூப் குடிப்பதால் பயம், பதற்றம் குறைந்து நல்ல தூக்கத்தை பெறலாம்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
Google News: https://bit.ly/3onGqm9
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்