தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Food Adulteration : உணவில் செய்யப்படும் கலப்படங்கள் உடலுக்கு எத்தனை ஆபத்துக்களை எற்படுத்துகிறது பாருங்கள்!

Food Adulteration : உணவில் செய்யப்படும் கலப்படங்கள் உடலுக்கு எத்தனை ஆபத்துக்களை எற்படுத்துகிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
May 29, 2024 06:00 AM IST

Food Adulteration : உணவில் செய்யப்படும் கலப்படங்கள் உடலுக்கு எத்தனை ஆபத்துக்களை எற்படுத்துகிறது பாருங்கள். கலப்படங்களை தவிர்கக என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Food Adulteration : உணவில் செய்யப்படும் கலப்படங்கள் உடலுக்கு எத்தனை ஆபத்துக்களை எற்படுத்துகிறது பாருங்கள்!
Food Adulteration : உணவில் செய்யப்படும் கலப்படங்கள் உடலுக்கு எத்தனை ஆபத்துக்களை எற்படுத்துகிறது பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

சில பிரபலமான பிராண்ட்கள் கூட உணவு கலப்படத்தில் ஈடுபடுகின்றன. நாம் சாப்பிடம் ஒவ்வொரு பொருளிலும் கலப்படம் உள்ளது. மளிகை, மருந்து, பால் மற்றும் தேனில் கூட கலப்படம் உள்ளது.

உணவுக்கலப்படம் என்றால் என்ன?

இயற்கை உணவில் உடலுக்கு நச்சு விளைவிக்கும் உட்பொருட்களை கலப்பது, அதன் இயற்கை குணங்களை மாற்றுவதுதான் கலப்படம். கலப்படம் நிறைந்த உணவை நீங்கள் உட்கொள்ளும்போது அது உங்கள் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகிறது. மேலும் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. பெரிய பிரச்னையாக இல்லாவிட்டாலும், உணவுக்கலப்படம், நா முழுவதும் உள்ளது. இது முற்றிலும் வணிகநோக்கில் செய்யப்படுகிறது.

ஏன் கலப்படம்? எப்படி கலப்படம்?

உணவு கலப்படம் என்று கூறும்போது, காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கூடுதல் சாயம் பூசுவது, உப்பில் சாக்பீஸ் பவுடர் கலப்பது, மல்லித்தூள், மஞ்சள் தூளில் வேதிப்பொருட்கள் கலப்பது, மிளகாய் தூளில் செங்கல் தூளை கலப்பது என்று இன்னும், இன்னும் உணவுகல்ப்படம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இதை நாம் தெரியாமலே அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். ஃபுட் சேஃப்டி ஸ்டான்டர்ட் அசோசியேசன் ஆஃப் இன்டியா (எஃப்எஸ்எஸ்ஏஐ) 28 சதவீத உணவு மாதிரிகள் கலப்படம் நிறைந்தது என்றும், 2012ம் ஆண்டு முதல் இரட்டிப்பாகிவிட்டது என்றும், 2018-2019ம் ஆண்டு தெரிவித்தது.

இந்தியாவில் விற்பனையாகும் தேனில் 75 சதவீதம் சர்க்கரை பாகு கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும், கலப்பட பரிசோதனையில் தெரியவந்தது. நிறுவனங்களில் மனிதவளம், திறன் மற்றும் பரிசோதனை முறைகள் குறைவாக உள்ளது என்று எஃப்எஸ்எஸ்ஏஐ கூறுகிறது.

நிறுவனங்கள் லாபத்திற்காக மட்டும்தான் கலப்படத்தில் ஈடுபடுகின்றன. இது அறமற்ற செயல் மற்றும் அரசு சட்டங்களுக்கு எதிரானது. அரசு என்ன சட்டங்கள் வகுத்தாலும், இன்று வரை கலப்படங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இது சட்டங்களிலும், விதிகளிலும் உள்ள ஓட்டைகளால் நடக்கிறது. சில சட்டங்கள் கடுமையாக வகுக்கப்படாததால் கலப்படங்கள் செய்யப்படுகிறது.

2020ம் ஆண்டு எஃப்எஸ்எஸ்ஏஐ கடுகு எண்ணெய் பிழிவதை தடுக்கும் சட்டத்தை திரும்பப்பெற்றது. வீட்டு உபயோத்துக்கு சுத்தமான கடுகு எண்ணெய் பிழிய வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. சாப்பிடக்கூடிய எண்ணெய் பிழிந்தெடுக்கும் தொழில் குறித்த அக்கறையை கூறியது, இது வணிகத்தை பாதிக்கும். ஆனால், வணிகத்துக்காக நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

தீர்வு

அரசு அதிகாரிகள், உணவு கலப்படத்தை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஃபுட் சேஃப்டி ஸ்டான்டர்ட்ஸ் என்ற புதிய பிரிவை எஃப்எஸ்எஸ்ஏஐ உருவாக்க திட்டமிட்டுள்ளது. உணவு கலப்படத்தை தடுக்க ஒரு சட்டம் 2006ம் ஆண்டு இயற்றப்பட்டது.

இதை முழுவதும் இயற்ற சில காலம் எடுக்கும். இதற்கிடையின் ஒரு நுகர்வோராக நாம், உணவுப்பொருட்களை வாங்கும்போது, கவனத்துடன் இருக்கவேண்டும். அக்மார்க் முத்திரை உள்ள பொருட்கள் உள்ளதா என்பதை கவனத்துடன் பார்த்து வாங்கவேண்டும். நல்ல கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கவேண்டும். பிராண்டுகளுக்காக மட்டுமே வாங்கக்கூடாது.

செயற்கை இனிப்புகள், உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இயற்கை சர்க்கரை எவ்வித உடல் உபாதைகளையும் ஏற்படுத்தாது. முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை உணவைத் தவிர்த்து, இயற்கை உணவுகளை உட்கொள்வது நமது உடல் நலனுக்கு சிறந்தது. பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை ஆப்பிள் சைடர் வினிகரில் கழுவிவிட்டு, பயன்படுத்துங்கள். நமது உடல் நலனை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

WhatsApp channel

டாபிக்ஸ்