Food Adulteration : நீங்கள் சாப்பிடும் நெய்யில் பொய் கலந்துள்ளதா? எப்படி கண்டுபிடிக்கலாம் பாருங்கள்!
Food Adulteration : நீங்கள் சாப்பிடும் நெய்யில் பொய் கலந்துள்ளதா? எப்படி கண்டுபிடிக்கலாம் பாருங்கள். உங்கள் வீட்டில் உபயோகிக்கும் நெய் மற்றும் பாலில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிக்கும் எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உணவில் கலப்படம் என்பது காலங்காலமாக நடந்து வரும் ஒன்றுதான். வியாபாரிகள் அதிக லாபம் பெறுவதற்காக உணவில் இதுபோன்ற கலப்படங்களை செய்கிறார்கள். இதனால் இதைப் பயன்படுத்தும் மக்களுக்கு, அவற்றை தொடர்ந்து உட்கொள்ளும்போது எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் சிறுசிறு வழிகள் மூலர் வீட்டிலேயே நாம் அன்றாடம் பயன்படுத்தும் உள்ள கலப்படங்களை கண்டுபிடிக்கமுடியும். உங்களின் அன்றாட பயன்பாட்டில் பால் மற்றும் நெய் ஆகியவற்றி கலப்படம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சி செய்து பார்த்து உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பால் மற்றும் நெய் சுத்தமாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை பரிசோதிப்பது எப்படி என்ற விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நெய்
நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் வீட்டிலேயே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் வாங்கும் நெய் போலி என்பதை கண்டுபிடிக்க உங்களுக்கு கடைகளில் கிடைக்கும் டிங்சர் அயோடின் தேவை. இந்த டிங்சர் அயோடின் என்பது சிறிய ரத்த காயங்களுக்கு வெளிப்புறத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். இதை நீங்கள் மருந்து கடைகளிலே வாங்கிக்கொள்ளலாம். இதனை நீங்கள் சிறிய ரத்த காயங்களின் மேல் வைத்தால் அது அப்போது கொஞ்சம் எரியும். பின்னர் காயத்தை ஆறவைத்து குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த டிங்சர் அயோடின் உங்கள் நெய் சுத்தமான நெய்யா அல்லது கலப்படமானதா என்பதை கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும்.
நீங்கள் வாங்கிய நெய்யில் கால் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் இந்த டிங்சர் அயோடினை இரண்டு சொட்டு விடவேண்டும். அதை நீங்கள் விட்டவுடன் அதன் நிறம் கருப்பாக மாறினால் அது கலப்படமான நெய் என்று பொருள். அதில் எவ்வித நிற மாற்றமும் ஏற்படவில்லையென்றால் அது சுத்தமான நெய் என்பதை கண்டுபிடிக்கலாம்.
பால்
பாலில் பெரும்பாலும் தண்ணீர் கலக்கப்படும். தண்ணீர் கலந்த பாலையும் கண்டுபிடிப்பது மிகவும் எளிது, ஒரு கருப்பு நிற அட்டையை 45 டிகிரி கோணத்தில் நிறுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். பாலை ஒரு இங்க் ஃபில்லரில் எடுத்து அதில் விடவேண்டும். தண்ணீர் அதிகம் கலந்த பால் என்றால் அந்த சறுக்கலில் வேகமாக ஓடி கீழே வந்துவிடும். தண்ணீர் கலக்காத பால் என்றால் மெதுவாக வரும். அதன் தடமும் அந்த கருப்பு அட்டையில் படியும். தண்ணீர் கலந்த பாலில் தடம் இருக்காது.
பாலில் கலக்கப்படும் மற்றுமொரு பொருள் சோப்பு பவுடர் ஆகும். இது பாலில் நல்ல நுரையை ஏற்படுத்துவதற்காக கலக்கப்படுகிறது. நீங்கள் டீக்கடைகளில் உள்ள பாலை பார்த்தால் தெரியும் அது நன்றாக நுரை தட்டியிருக்கும். நீங்கள் வாங்கும் பாலில் சோப்பு பவுடர் கலக்கப்பட்டுள்ளதா என்பதையும் உங்களால் எளிதாகக் கண்டுபிடிக்கமுடியும். பாலை காய்ச்சிய பின் ஆற்றும்போது நுரை பொங்கி வந்து அது நீண்ட நேரம் அப்படியே இருந்தால் அதில் சோப்பு பவுடர் கலக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
கலப்படம் இல்லாத பாலில் நுரை கொஞ்சமாக வரும் அதுவும் சிறிது நேரத்தில் அடங்கிவிடும். இதன் மூலம் உங்கள் வீட்டு பாலில் சோப்புத்தூள் கலந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்படி சந்தேகம் வரும்போது அதை லேபில் பரிசோதித்து தெரிந்துகொண்டு, அந்தப்பாலை வாங்கலாம் அல்லது அந்த பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு சட்டங்கள் உள்ளன. எனவே நீங்கள் இதுபோன்ற சிறிய குறிப்புகளை பின்பற்றி கலப்படங்களை கண்டுபிடித்துவிடுங்கள்.
உங்களுக்காக இதுபோன்ற எண்ணற்ற தகவல்களை ஹெச்.டி. தமிழ் தினமும் தொகுத்து வழங்கி வருகிறது. இதுபோன்ற பிரத்யேக தகவல்களை தெரிந்துகொள்ள நீங்கள் எங்கள் இணைய பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்