Food Adulteration: திருப்பதி லட்டுல மட்டுமில்லை! உங்க வீட்டு பாலிலும் கலப்படம் தான்-food adulteration is a scam in india - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Food Adulteration: திருப்பதி லட்டுல மட்டுமில்லை! உங்க வீட்டு பாலிலும் கலப்படம் தான்

Food Adulteration: திருப்பதி லட்டுல மட்டுமில்லை! உங்க வீட்டு பாலிலும் கலப்படம் தான்

Suguna Devi P HT Tamil
Sep 25, 2024 05:26 PM IST

Food Adulteration: சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்பட்ட லட்டு செய்யப்பட்ட நெயில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை தொடர்ந்து இந்தியாவில் பல உணவுகளில் கலப்படம் செய்யப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Food Adulteration: திருப்பதி லட்டுல மட்டுமில்லை! உங்க விட்டு பாலிலும் கலப்படம் தான்
Food Adulteration: திருப்பதி லட்டுல மட்டுமில்லை! உங்க விட்டு பாலிலும் கலப்படம் தான்

கலப்படம் செய்யப்படும் பொருட்கள் 

சில மாதங்களுக்கு முன்பு நாம் பயன்படுத்தும் பாலில் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. மேலும் இந்திய உணவு ஆணையம் பல பால் தயாரிக்கும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் சோதனை நடத்தியது. இது குறித்து  பாலில் பெரும்பாலும் யூரியா, சோப்பு, சர்க்கரை மற்றும் வனஸ்பதி எண்ணெய் ஆகியவற்றில் கலப்படம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

கோதுமையில்  பொதுவாக எர்காட் என்ற பூஞ்சை  கலப்படம் செய்யப்படுகிறது. இதில் அதிக அளவிலான நச்சுப் பொருட்கள் உள்ளன. பேக்கேஜ் செய்யப்பட்ட மசாலாப் பொருட்களை விட, பேக்கேஜ் செய்யப்படாத மசாலாப் பொருட்களில் கலப்படம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் தூளில் லீட் குரோமேட் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.  இது இரத்த சோகை, பக்கவாதம், மூளை பாதிப்பு மற்றும் கருச்சிதைவுகளை ஏற்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிடாஸின், சாக்கரின், மெழுகு, கால்சியம் கார்பைடு மற்றும் காப்பர் சல்பேட் ஆகியவற்றுடன் கலப்படம் செய்யப்படலாம். பச்சை பழங்களை செயற்கையாக பழுக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகள் பச்சை நிறமாக இருக்கக  செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன.  

இந்திய உணவு ஆணையத்தின் தீர்வு 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் உணவுக் கலப்படம் தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதன் முதல் படியாக இதன் இணைய தளத்தில் கலப்படங்களை எளிதில் எப்படி கண்டறிவது எனபது குறித்தான புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  

இது நுகர்வோர் வீட்டுப் பொருட்களில் உள்ள பொதுவான உணவுக் கலப்படங்களைக் கண்டறிய வழிகாட்டியாக செயல்படுகிறது. இந்த வழிகாட்டி புத்தகத்தில் பால், எண்ணெய், சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்கள் உட்பட பல்வேறு வகை உணவுப் பொருட்களில் உள்ள கலப்படத்தை கண்டறியும் 50 சோதனைகள் உள்ளன. 

நகரின் அதிக மக்கள் புழங்கும் இடங்களில் நடமாடும் உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள், ஆன்-தி-ஸ்பாட் தரமான சோதனைக்கான அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படும். இந்த வாகனங்கள் பொதுக்கூட்டங்கள், பள்ளிகள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் நுகர்வோர் நிறுவனங்களுக்குச் சென்று, "பொதுவாக உட்கொள்ளும் நெய், பால், இனிப்புகள் மற்றும் மசாலாப் பொருட்களில் குறிப்பிட்ட கலப்படம் உள்ளதா என விரைவான சோதனைகளை நடத்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கை வாயிலாக உணவு கலப்படங்களை கட்டுப்படுத்த முடியும் என இந்தியா உணவு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் எந்த ஒரு பொருள் வாங்கும் போதும் அது FSSAI ஆல் அங்கிகரிக்கப்பட்டவையா என சோதித்து பார்த்து வாங்க வேண்டும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.