தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Follow These Ayurvedic Remedies To Improve Eye Health

Glaucoma Prevention Tips: கிளாக்கோமா என்கிற கண் அழுத்த பாதிப்பை தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 08, 2024 08:39 PM IST

கண் அழுத்த நோயாக இருந்து வரும் கிளாக்கோமா அதன் ஆரம்ப நிலைகளில் கண்டறிவதன் மூலம் பாதிப்பை குறைத்துவிடலாம். ஆயர்வேத முறையில் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை பார்க்கலாம்.

கண் அழுத்த பாதிப்பை தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
கண் அழுத்த பாதிப்பை தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கிளாக்கோமாவை அதன் ஆரம்ப நிலைகளில் கண்டறிந்தால் திறம்பட சிகிச்சை செய்து பாதிப்பை குறைக்க முடியும். இதன் ஆரம்ப அறிகுறிகளில் கடுமையான தலைவலி, கண் வலி, குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை, கண் சிவத்தல், உங்கள் புற அல்லது மையப் பார்வையில் குருட்டுப் புள்ளிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன.

கிளாக்கோமா பாதிப்புக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். கண் அழுத்தத்தை குறைப்பதற்கும், அதன் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கும் மூலிகை மருந்துகள் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் தவிர, இந்த கண் நிலைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தக்கூடிய பல ஆயுர்வேத வீட்டு மருத்துவ முறைகளை பார்க்கலாம்.

நேத்ரா பஸ்தி

இந்த தெரிபியில் மருந்து கலந்த நெய் கண்களில் ஊற்றப்படுகிறது. இதன் மூலம் கண்களிலும், அதை சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நச்சுக்கள் நீக்கப்படுகின்றன. இந்த தெரப்பியின் போது உங்களை படுக்கச் சொல்லி, ஒரு மாவு கொண்டு கண்ணை சுற்றி கிணறு போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மேல் நெய் ஊற்றப்படுகிறது.

ஸ்நேஹாபனா சிகிச்சை

இந்த சிகிச்சையில், மூலிகைகள் கலந்த நெய் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நோய் பாதிப்பு இருப்பவருக்கு வாய்வழியாக கொடுக்கப்படுகிறது

வழக்கமாக கண் கழுவுதல்

காலை வேளையில் வாய் நிரம்ப தண்ணீர் ஊற்றி அதை விழுங்காமலும், கொப்பளிக்காமலும் கண்களை குளிர்ந்த நீரில் மெதுவாக கழுவ வேண்டும். தண்ணீர் மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ரோஸ்வாட்டர் அல்லது குலாப்ஜல் போன்றவற்றில் ஏதாவதொன்றை பயன்படுத்தலாம்

ஒளி அல்லது விளக்கைப் பார்ப்பது

இது ஒரு பழைய ஆயுர்வேத நடைமுறையாகும். இதை செய்வதன் மூலம் மனது அமைதியடையும். மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு வகையான தியானமாகவும், கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. நெய்யைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றப்பட்ட ஒரு மெழுகுவர்த்தி அல்லது மண் விளக்கின் திரியை ஒருவர் நீண்ட நேரம் தீவிரமாக பார்க்க வேண்டும். சூடான ஒளி கண்பார்வையை மேம்படுத்துவதாக ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.

கண் திட்டுகளை குளிர்ச்சிபடுத்துதல்

வெள்ளரி காய், ப்ரஷ்ஷான ஆட்டுப்பாலில் ஊறவைத்த காட்டன் பேட்கள் ஆகியவற்றை கண்களின் மேல் வைக்கப்படும் போது, கண்களில் குளிர்ச்சியான விளைவு ஏற்படுத்துகிறது. அத்துடன் கண்களை முழுமையாக புதுப்பிக்கிறது

ஆமணக்கு எண்ணெய்

கண்களில் ஒரு துளி சுத்தமான ஆமணக்கு எண்ணெயுடன், உள்ளங்கால்களில் எண்ணெய் தடவுவது வறண்ட கண்களுக்கான சிறந்த தீர்வாக உள்ளது.

திரிபலா

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்றின் கலவை திரிபலா என்று அழைக்கப்படுகிறது. சக்திவாய்ந்த மூலிகை கலவையான இதன் சொட்டுக்களை கண்களில் ஊற்றுவதாலோ அல்லது சாப்பிடும் விதமாக தயார் செய்து உள்கொள்வதாலோ கண் சோர்வு, கண்கள் சிவப்பு ஆகுதல், வீக்கம் ஆகியவை குறைகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்