Flaxseed Chutney : என்ன ஃப்ளாக்ஸ் சீட்ல சட்னி செய்ய முடியுமா? இதோ ரெசிபி! டிபஃன், சாதம் இரண்டுக்கும் ஏற்றது!
Flaxseed Chutney : ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்
ஃப்ளாக்ஸ் சீட் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
உளுந்து – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய் – 5
(சாதா மிளகாய் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கார அளவுக்கு ஏற்ப மிளகாய் அளவை மாற்றிக்கொள்ளலாம்)
கறிவேப்பிலை – 2 கொத்து
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை சூடாக்கி அதில் ஃப்ளாக்ஸ் சீட்களை சேர்க்க வேண்டும்.
பின்னர் உளுந்து, சீரகம், மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அனைத்தும் சிவந்தவுடன், தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும்.
ஆறியவுடன் மிக்ஸிஜாரில் சேர்த்து மல்லித்தழை, உப்பு சேர்த்து துவையலாக அரைக்க வேண்டும்.
இதை இட்லி, தோசை மற்றும் சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
பொதுவாக குழந்தைகள் ஆளிவிதையை அப்படியே சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு இதுபோல் செய்து கொடுக்கலாம்.
ஃப்ளாக்ஸ் சீட்ஸின் நன்மைகள்
ஆளிவிதை எடை இழப்பு முதல் நாள்பட்ட நோய்களைத் தடுப்பது வரை அனைத்திற்கும் உதவும். இதன் அற்புதமான மருத்துவ குணங்களை அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இந்த கொழுப்பு அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஆளி விதை உயரும் தங்களின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவும்.
ஆளி விதைகள் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. கொழுப்பு உடலில் சேராமல் இருந்தாலே இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த கொழுப்பு அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நன்றாக வேலை செய்கிறது.
இதயத்துக்கு இதமான இந்த ஆளி விதைகளை அன்றாட உணவில் பயன்படுத்தி பலன்பெறுங்கள். இதை வறுத்து தினமும் மென்று சாப்பிடலாம் அல்லது ரசம் வைத்து, சூப் செய்து என பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்