தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Flaxseed And Pregnancy : கருமுட்டை வளர்ச்சிக்கு ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களை எந்த நாளில் எப்படி பயன்படுத்த வேண்டும்?

Flaxseed and Pregnancy : கருமுட்டை வளர்ச்சிக்கு ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களை எந்த நாளில் எப்படி பயன்படுத்த வேண்டும்?

Priyadarshini R HT Tamil
Jul 06, 2024 08:59 AM IST

Flaxseed and Pregnancy : கருமுட்டை வளர்ச்சிக்கு ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களை எந்த நாளில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Flaxseed and Pregnancy : கருமுட்டை வளர்ச்சிக்கு ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களை எந்த நாளில் எப்படி பயன்படுத்த வேண்டும்?
Flaxseed and Pregnancy : கருமுட்டை வளர்ச்சிக்கு ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களை எந்த நாளில் எப்படி பயன்படுத்த வேண்டும்?

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

கருத்தரிப்பு

திருமணம் முடிந்தோ அல்லது குழந்தை வேண்டும் என்று எண்ணும்போதோ உடனே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதுதான் கருவுறாமை ஆகும். நீங்கள் எத்தனை முறை பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக்கொண்டாலும், உங்களால் கருத்தரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அதற்கு உரிய காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டும்.

நீங்கள் கருவுற முடியாமல் போவதற்கு, ஆரோக்கிய பிரச்னைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாகின்றன. ஆனால் பாதுகாப்பான பல சிகிச்சைகள் உங்களை கருவுறவைக்கும். இயற்கை முறையிலும் சில வழிகளை பின்பற்றினால் உங்களால் கருவுற முடியும்.

அறிகுறிகள்

கருவுறாமைக்கு தெளிவான அறிகுறிகள் கிடையாது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளால் பெண்களால் கருவுற முடியாமல் போகிறது. ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் கருவுற முடியாமல் போகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று அல்லது பெறாமல் என இரு முறைகளிலும் கருவுறுகிறார்கள்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

உங்களுக்கு கருவுறுதல் பிரச்னைகள் ஏற்பட்டால், ஓராண்டு வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னர்தான் மருத்துவரை அணுகவேண்டும்.

பெண்களுக்கு,

35 வயதை கடந்துவிட்டால்,

40 வயதை கடந்த பின்னர்,

மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டால், தாமதல் மற்றும் வலி போன்றவை,

கருவுறுதல் கோளாறுகள்,

ஓருமுறைக்கு மேல் கருச்சிதைவு

இடுப்பில் வீக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஆண்களுக்கு

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்,

விறைப்புக் கோளாறுகள்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஹெர்னியா அறுவைசிகிச்சை செய்பவராக இருந்தால்,

உடன் பிறந்தவர்களுக்கு கருவுறுதல் கோளாறுகள் இருந்தால்,

ஆனால், உங்களின் அனைத்து மருத்துவ அறிக்கைகளும் சரியாக இருந்தும், நீங்கள் அனைத்து முயற்சிகளும் எடுத்த பின்னரும் கருத்தரிக்க முடியவில்லையா?

ஃப்ளாக்ஸ் சீட்கள் என்று அழைக்கப்படும் ஆளிவிதைகள் கருமுட்டையின் வளர்ச்சிக்கு உதவக்கூடியவை ஆகும். ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களை சாப்பிடும்போது அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுத்தாலும், கருமுட்டையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாது. கருமுட்டை வளர்ச்சிக்கு ஆளி விதைகளை எப்போது எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ஆளி விதைகள் பொடி – ஒரு ஸ்பூன்

சூடான தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை

ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அதில் ஒரு ஸ்பூனை எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் கலந்து பருகவேண்டும்.

மாதவிடாயின் 6வது நாள் முதல் 15வது நாள் வரை இதை இடைவிடாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

மாதவிடாயின் 6வது நாள் என்பது துவங்கியது முதல் கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். இந்த நாட்களில் பெண்கள் கருவுறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால், இந்த நாட்களில் செய்யவேண்டும்.

இது உங்களின் கருமுட்டை ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும். மேலும் ஆளிவிதைகளை தினமுமே நாம் எடுத்துக்கொள்ளும்போது அது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இதை நீங்கள் முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவர்களின் அறிவுரைகளையும் பெறுவது அவசியம். எனவே இந்த குறிப்பை பின்பற்றி உங்களுக்கு கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்