ப்ளாக்ஸ் விதைகள் : ப்ளாக்ஸ் விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? அதன் சாதக பாதகங்கள் என்ன? – ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ப்ளாக்ஸ் விதைகள் : ப்ளாக்ஸ் விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? அதன் சாதக பாதகங்கள் என்ன? – ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

ப்ளாக்ஸ் விதைகள் : ப்ளாக்ஸ் விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? அதன் சாதக பாதகங்கள் என்ன? – ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Updated Apr 12, 2025 06:21 AM IST

ப்ளாக்ஸ் விதைகள் : இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. செரிமானம் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் கொண்டது இந்த ஃப்ளாக்ஸ் விதைகள், இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு எற்படுகிறது.

ப்ளாக்ஸ் விதைகள் : ப்ளாக்ஸ் விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? அதன் சாதக பாதகங்கள் என்ன? – ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
ப்ளாக்ஸ் விதைகள் : ப்ளாக்ஸ் விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? அதன் சாதக பாதகங்கள் என்ன? – ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

விதைகளை சாப்பிடுவது இப்போது பரவலாகி வருகிறது. அதற்கு காரணம் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்தான். ப்ளாக்ஸ் விதைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. செரிமானம் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் கொண்டது இந்த ஃப்ளாக்ஸ் விதைகள், இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு எற்படுகிறது. அவற்றை அப்படியே சாப்பிடலாமா?‘

ப்ளாக்ஸ் விதைகளில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் இதய ஆரோக்கியத்துக்கும், வீக்கத்தைக் குறைக்கவும் ஏற்றதுதான். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. இவை குடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. இதில் உள்ள லிகனன்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகின்றன. சில புற்றுநோய்கள் வரும் ஆபத்தையும் அது குறைக்கிறது என்று கரிமா கோயல் கூறுகிறார். இந்த விதைகளில் உள்ள புரதச்சத்துக்கள் தசைகளை பராமரிக்கவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன.

நீங்கள் இவற்றை சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளும்போது அது கொழுப்பை குறைக்க உதவுவதாக தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிசனில் வெளியான ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. ( https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3361740/#:~:text=Flaxseed%20interventions%20reduced%20total%20and,mmol%2FL%2C%20respectively)%20supplements ) இது ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, சில புற்றுநோய்களையும் தடுக்கிறது. இதை நாம் அப்படியே சாப்பிடலாமா?

ப்ளாக்ஸ் விதைகளை நீங்கள் பல வழிகளில் உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். எனினும் அதை அப்படியே சாப்பிடலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளது. நீங்கள் அதை அப்படியே சாப்பிடலாம். ஆனால் அதற்கு சிறிது எச்சரிக்கை உணர்வு தேவை. ப்ளாக்ஸ் விதைகளை அப்படியே சாப்பிடும்போது அது நஞ்சாகாது. ஆனால் அதில் ஃபைட்டிக் ஆசிட் மற்றும் சியானோஜெனிக் கிளைக்கோசைட்ஸ் போன்றவை உள்ளன. இது உங்கள் உடலுக்கு சில உபாதைகளை ஏற்படுத்தும் என பயோகேட்டலசிஸ் அண்ட் அக்ரிகல்சுரல் பயோடெக்னாலஜி ( https://www.sciencedirect.com/science/article/abs/pii/S187881811730 ) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை கூறுகிறது. இந்த உட்பொருட்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்போதும் அல்லது அதிகளவில் சாப்பிடும்போது உபாதைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. செரிமான மண்டலத்துக்கு ஃப்ளாக்ஸ் விதைகள் சில ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. உங்கள் உடல் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சாது. இவற்றை அரைத்து அல்லது ஊறவைத்து சாப்பிடுவது இதன் பலன்களை அதிகரிக்கச் செய்கிறது.

ஃப்ளாக்ஸ் விதைகளை அப்படியே எப்படி சாப்பிடுவது?

• காலையில் நீங்கள் சாப்பிடும் ஸ்மூத்தியுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு கூடுதல் நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

• தயிர் அல்லது ஓட்ஸில் மேலே தூவி சாப்பிடலாம்.

• சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்.

• நட்ஸ் மற்றும் விதைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

• ஓரிரவு ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அந்த தண்ணீரை பருகலாம்.

ஃப்ளாக்ஸ் விதைகளை அப்படி சாப்பிடும்போது மனதில்கொள்ள வேண்டியது?

• அதிகம் தண்ணீர் பருகவேண்டும். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் அதிகம் தண்ணீர் பருகாவிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

• கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடத் துவங்குங்கள், இதனால் உங்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகள் தடுக்கப்படும்.

• முமுதாக அல்லாமல் பொடித்து சாப்பிடுங்கள்.

• காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வையுங்கள். இதில் எண்ணெய் அதிகம் இருக்கும்.

ஃப்ளாக்ஸ் விதைகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

• வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஆகியவை அதிக நார்ச்சத்துக்களால் ஏற்படுகிறது.

• நீங்கள் அதிகம் தண்ணீர் பருகவில்லையென்றால், இது வயிற்றில் அசவுகர்யங்களை ஏற்படுத்தும்.

• ஹார்மோன்கள் சமமின்மையை ஏற்படுத்தும். இதில் உள்ள லிகனன்கள் ஈஸ்ட்ரோஜனை பாதிக்கும். இது ஹார்மோன்கள் சென்சிட்டிவ் உள்ளவர்களுக்கு கஷ்டம்தான்.

• இதில் சில நேரங்களில் சையனைட் நச்சு உருவாகலாம். இது அரிதுதான் என்றாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகம் சாப்பிடும்போது இந்த நச்சுத்தன்மை ஏற்படும். அளவாக எடுக்கும்போது எதுவும் ஆகாது.

நீங்கள் ஃப்ளாக்ஸ் விதைகளை அப்படியே சாப்பிடலாம். ஆனால் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் அப்படியே சாப்பிடும்போது நீங்கள் சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மிதமான அளவில், வறுத்து பொடித்து அல்லது ஊறவைத்து சாப்பிடும்போது ஆபத்துக்கள் குறைந்து நன்மைகள் கிடைக்கிறது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.