Flat Belly : உங்கள் தொப்பையை ஈசியாக குறைக்க வேண்டுமா? தட்டையான வயிறைக் கொடுக்கும் இரவு பானம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Flat Belly : உங்கள் தொப்பையை ஈசியாக குறைக்க வேண்டுமா? தட்டையான வயிறைக் கொடுக்கும் இரவு பானம்!

Flat Belly : உங்கள் தொப்பையை ஈசியாக குறைக்க வேண்டுமா? தட்டையான வயிறைக் கொடுக்கும் இரவு பானம்!

Priyadarshini R HT Tamil
Updated May 31, 2024 12:07 PM IST

Flat Belly : உங்கள் தொப்பையை ஈசியாக குறைக்க வேண்டுமா? தட்டையான வயிறைக் கொடுக்கும் இந்த இரவு பானத்தை மட்டும் குடித்துப் பாருங்கள்.

Flat Belly : உங்கள் தொப்பையை ஈசியாக குறைக்க வேண்டுமா? தட்டையான வயிறைக் கொடுக்கும் இரவு பானம்!
Flat Belly : உங்கள் தொப்பையை ஈசியாக குறைக்க வேண்டுமா? தட்டையான வயிறைக் கொடுக்கும் இரவு பானம்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

பட்டைப் பொடி – 2 சிட்டிகை

மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

மிளகுத்தூள் – 2 சிட்டிகை

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரில் பட்டைப்பொடி, மஞ்சள் தூள், மிளகுத்தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். நன்றாக கொதித்தவுடன், வடிகட்டி, அதில் தேன் கலந்துகொள்ளவேண்டும். இரவு உறங்கச்செல்லும் முன் அதை பருகவேண்டும்.

தொப்பையால் ஏற்படும் தொல்லைகள்

உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளது என்றால், அது உங்களுக்கு பல்வேறு அவதிகளை ஏற்படுத்தும். இதனால் அதை குறைப்பதற்கு நீங்கள் பல்வேறு முயற்சிகளை செய்வீர்கள். அதற்கு நீங்கள் சில மாத்திரைகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வீர்கள்.

அவற்றை விற்பனை செய்பவர்களும் அவை உங்கள் உடல் எடையையும், தொப்பையையும் உடனே குறைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதுகுறித்து எவ்வித அறிவியல் தீர்வுகளும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் உங்கள் உடல் எடையை குறைக்கவும், தொப்பையை அகற்றவும் இயற்கை தீர்வுகள் உள்ளன. அதில் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு அடங்கும்.

விசரல் ஃபேட், வயிறு அல்லது தொப்பையில் சேரும் கொழுப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது வயிற்றைச் சுற்றியுள்ள உடல் பாகங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறது.

விசரல் கொழுப்புகள் வெளியிடும் ஹார்மோன்கள், உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோயை ஏற்படுத்தும். இதய நோய்களுக்கும் ஆளாக்கும். மற்ற உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கிறது. இவை ஆக்டிவ் கொழுப்புகள் என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

இந்த கொழுப்பு மற்ற கொழுப்பைவிட, குறைவாகத் தெரியும். இது சருமத்துக்கு அடியில் இருந்துகொண்டு உங்கள் உடலுக்கு உபாதைகளைக் கொடுக்கும். எனினும், வயிற்றுப்பகுதியில் உள்ள சதை அதிகரித்தால் விசரல் கொழுப்பும் அதிகரிக்கும்.

ஒரு சாப்பிடும் உணவுக்கு ஏற்ப வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பின் அளவும் அதிகம் இருக்கும். சில குறிப்பிட்ட உணவு மாற்றங்களையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டாலே போதும் உங்கள் உடலில் இதுபோன்ற ஒரு கொழுப்பு குறைந்துவிடும்.

எனவே, இதுபோன்ற இயற்கை வழிமுறைகளை கடைபிடித்து உங்கள் உடலின் கொழுப்பு அளவைக் குறைக்கலாம். அதன் மூலம் தொப்யையும் குறைத்து, ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.