தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Flat Belly : தட்டையான வயிறு வேண்டுமா? உடற்பயிற்சியின்றி எடை குறைக்கணுமா? இதோ இந்த ஒரு பானத்தை எடுத்துக்கங்க!

Flat Belly : தட்டையான வயிறு வேண்டுமா? உடற்பயிற்சியின்றி எடை குறைக்கணுமா? இதோ இந்த ஒரு பானத்தை எடுத்துக்கங்க!

Priyadarshini R HT Tamil
Jul 08, 2024 04:43 PM IST

Flat Belly : தட்டையான வயிறு வேண்டுமா? உடற்பயிற்சியின்றி எடை குறைக்கணுமா? அதற்கு உதவும் இந்த பானத்தை தினமும் பருகி பலன் பெறுங்கள். 10 நாளில் மாற்றம் உறுதி.

Flat Belly : தட்டையான வயிறு வேண்டுமா? உடற்பயிற்சியின்றி எடை குறைக்கணுமா? இதோ இந்த ஒரு பானத்தை எடுத்துக்கங்க!
Flat Belly : தட்டையான வயிறு வேண்டுமா? உடற்பயிற்சியின்றி எடை குறைக்கணுமா? இதோ இந்த ஒரு பானத்தை எடுத்துக்கங்க!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

இன்றைய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பேர்கள் சந்திக்கும் தலையாய பிரச்னைகளுள் ஒன்றாக உடல் எடையும், உடல் பருமனும் உள்ளது. உடல் எடையை குறைக்க எத்தனை முயன்றும் முடியவில்லை என்று நினைப்பவர்கள், மனம் தளராமல் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகுங்கள். உடல் எடையை உடற்பயிற்சியின்றி குறைக்கலாம். தட்டையான தொப்பையை உறுதியளிக்கும் இந்த பானத்தை தயாரிப்பது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1

வாழைப்பழத்தின் தோல் – 1

எலுமிச்சை – 2

எலுமிச்சை பழத்தோல் – 2

எலுமிச்சைப்பழம் கொழுப்பை கரைக்க உதவுகிறது. வயிற்றில் குவிந்துள்ள கொழுப்பை கரைத்து தட்டையான வயிறைக்கொடுக்கிறது.

ஆப்பிள் – 1

இஞ்சி – ஒரு இன்ச்

இஞ்சி கொழுப்பு மற்றும் கலோரிகளைக் கரைக்கிறது. பசியைப்போக்கி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்து, அதை நன்றாக இயங்க வைக்கும்.

செய்முறை

வாழைப்பழத்தின் தோலை உறித்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஆப்பிளின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இஞ்சியின் தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறை எடுத்துவிட்டு, அதன் தோலையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் வாழைப்பழத்தின் தோல் மற்றும் எலுமிச்சை பழத்தின் தோல் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இந்த தண்ணீரை ஆறவைத்துவிடவேண்டும்.

ஆறிய இந்த தண்ணீரை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் நறுக்கிய வாழைப்பழத்துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், இஞ்சித்துண்டுகள் மற்றும் எலுமிச்சை பழத்தை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் காலை உணவு உட்கொள்ளும் முன் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை 10 நாட்கள் தொடர்ந்து பருகிப்பாருங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாகக் காண்பீர்கள். கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள்.

பலன் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் நாம் வேண்டாம் என்று தூக்கி வீசும் பழங்களின் தோல்கள் மற்றும் கொட்டைகளில்தான் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தோல்கள் மற்றும் விதைகளை சாப்பிடுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.