தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Flat Belly : தட்டையான வயிறுவேண்டுமா? இந்தப்பழங்கள் மட்டும் ஒரு கைப்பிடியளவு தினமும் சாப்பிட்டால் போதும்!

Flat Belly : தட்டையான வயிறுவேண்டுமா? இந்தப்பழங்கள் மட்டும் ஒரு கைப்பிடியளவு தினமும் சாப்பிட்டால் போதும்!

Priyadarshini R HT Tamil
May 27, 2024 02:28 PM IST

Flat Belly : உங்களுக்கு தட்டையான வயிறுவேண்டுமா? இந்தப்பழங்களை மட்டும் ஒரு கைப்பிடியளவு தினமும் சாப்பிட்டுப்பாருங்கள் நல்ல மாற்றம் கிடைக்கும்.

Flat Belly : தட்டையான வயிறுவேண்டுமா? இந்தப்பழங்கள் மட்டும் ஒரு கைப்பிடியளவு தினமும் சாப்பிட்டால் போதும்!
Flat Belly : தட்டையான வயிறுவேண்டுமா? இந்தப்பழங்கள் மட்டும் ஒரு கைப்பிடியளவு தினமும் சாப்பிட்டால் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பி வழியும். இந்த பழங்கள் உங்களுக்கு செரிமானத்துக்கும் உதவும். வயிறு உப்புசத்தையும் போக்கும். கொழுப்பை கரைக்கவும் உதவும். நீங்கள் தட்டையான வயிறு பெறவேண்டுமெனில் இந்த 6 பழங்களை உங்கள் உணவுகளில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்பது பழமொழி. இது உங்களின் வயிறை தட்டையாக்கவும் உதவும். ஆப்பிளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள பெக்டின், ஒருவகை கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். 

அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். செரிமானத்தை மெதுவாக்கும். சாப்பாட்டுக்கு முன் ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு உணவு உண்டவர்கள் குறைவான கலோரிகளை உட்கொண்டனர். ஆனால் வேறு சிற்றுண்டிகளை உட்கொண்டவர்கள் அதிக கலோரி உணவுகளை எடுத்துக்கொண்டனர் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்பிளில் பாலிபினால்கள் உள்ளது. 

அது கொழுப்புகளை வளர்சிதையை பாதிக்கும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு சேமிக்கப்படுவது தடுக்கப்பட்டு, உங்கள் உடலில் எடை சரியாக பராமரிக்கப்படும். எனவே உங்கள் வயிற்றை தட்டையாக ஆப்பிள் ஒரு சிறந்த தேர்வு.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளதாக அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் அதில் உங்கள் உடலை மெலிதாக்கும், குறிப்பாக வயிற்றுப்பகுதிகளை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. வாழைப்பழத்தில் எதிர்க்கும் ஸ்டார்ச்கள் அதிகம் உள்ளது. இவை ஒரு வகையான கார்போஹைட்ரேட்கள், அவை செரிமானத்தை தடுக்கிறது. 

இவை கரையக்கூடிய நார்ச்சத்துக்களாக உங்கள் உடலில் இருந்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியச்சத்துக்கள் உள்ளது. 

அவை தண்ணீரை தக்கவைப்பதை குறைக்க உதவி, வயிறு உப்புசத்தை சரிசெய்யும். வாழைப்பழத்தில் உள்ள எதிர்க்கும் ஸ்டார்ச்கள், உங்கள் உடலில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் உடல் எளிதாக கொழுப்பை கரைக்கும். எனவே வாழைப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்ள தவறாதீர்கள்.

ஆரஞ்சு பழங்கள்

ஆரஞ்சு பழங்கள் சளியைப் போக்குவதற்கு மட்டுமல்ல, அவற்றில் குறைவான அளவு கலோரிகள் உள்ளன. அவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடல் எடையை குறைப்பதற்கு சரியான தீர்வாகும். ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. 

அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்கள் எடுத்துக்கொள்வது, உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் தொடர்புடையது. அது இடுப்பு சுற்றளவையும் குறைக்கும். ஆரஞ்சில் எள்ள இயற்கையான சர்க்கரை, உங்களுக்கு தேவையான சிற்றுண்டி உணவைக் கொடுத்து, நீங்கள் அதிகம் உணவு உட்கொள்வதை தடுத்து, உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

தர்ப்பூசணிகள்

தர்ப்பூசணியில் அதிகப்படியான நீர்ச்சத்துக்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்தது. இது உங்கள் தண்ணீரை தேவையை பூர்த்தி செய்கிறது. இது உங்கள் உடலில் நீர்ச்சத்து தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்களுக்கான சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். 

ஊட்டச்சத்துக்கள் குறித்த ஆய்வில், தர்ப்பூசணி உட்கொள்வது, உங்கள் உடல் எடை குறைப்பிலும், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. குறிப்பாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியானது. இது சிட்ருலின் என்ற அமினோஅமிலங்களால் ஏற்படுகிறது. கொழுப்பு செல்களில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. எனவே தினமும் ஒரு துண்டு தர்ப்பூசணி உங்களின் வயிற்றை தட்டையாக்க உதவும்.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதில் அதிக திறன் பெற்றது. இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை இயற்கை முறையில் நீக்க உதவுகிறது.

எலுமிச்சை பழத்தில் உள்ள பாலிஃபினால்கள், உடல் எடை அதிகரிப்பதை குறைக்கின்றன. கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. எனவே தினமும் உங்கள் நாளை எலுமிச்சை சாறுடன் துவங்கினால், உங்கள் உடலில் வளர்சிதையை அதிகரித்து, உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இது உங்கள் வயிறை தட்டையாக்க உதவுகிறது.

தக்காளி

தக்காளிதான் உடல் எடையை குறைக்கும் பழங்களுள் முதலில் வருவது. ஆனால் அவை முற்றிலும் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவை. நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. கலோரிகள் குறைந்தது. அது உங்களுக்கு நாள்முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். ஒட்டுமொத்த கலோரி உட்கொள்தையும் தடுக்கும். 

தக்காளி சாப்பிடுவது, உங்கள் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்பையை குறைக்க உதவுகிறது. தக்காளியில் லைக்கோபென் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது வீக்கத்தை குறைத்து, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. உங்கள் சாப்பாடு மற்றும் சாலட், சான்விச்களில் தக்காளியை சேர்த்து சாப்பிட்டு உங்களின் தொப்பையை குறையுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்