Flat Belly : தொப்பையை குறைக்க விரும்புபவர்களுக்கு.. இந்த பானம் உதவலாம்! அப்படி என்ன பானம்?
Flat Belly : தொள தொளவெனும் தொங்கும் தொப்பையை பார்க்கும்போது கவலையாக உள்ளதா? அதை குறைக்க உதவும் ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவையாக இருப்பதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு, வீட்டு வைத்திய முறையில் ஒரு பானம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பானம் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. பாரம்பரியமாக வீடுகளில் பருகப்படும் இந்த பானம் எவ்வாறு செய்வது?
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் – 1
எலுமிச்சை பழங்கள் உங்கள் உடலின் எடையை குறைக்கக் கூடிய உட்பொருட்களைக் கொண்டுள்ளது. இதில் கலோரிகள் குறைவு மற்றும் இயற்கை சர்க்கரை உள்ளது. இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை கரைந்தோடச் செய்யும்.
இஞ்சி – ஒரு இன்ச்
இஞ்சியில் இருந்து இயற்கையாக சுரக்கும் அமிலங்கள், உங்கள் உடலின் செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் அது கொழுப்பை உறிஞ்சிக்கொள்ளும்.
சீரகம் – 1 ஸ்பூன்
இது உடல் எடை குறைக்க உதவும். குறிப்பாக தொப்பையில் உள்ள கொழுப்பை குறைப்பதில் மிகவும் சிறந்தது.
தேன் (தேவைப்பட்டால்)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சேர்த்துவிட்டு, ஒரு லிட்டர் தண்ணீரையும் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் இறக்கி, வடிகட்டி அந்த தண்ணீரை தனியாக ஒர பாத்திரத்தில் சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த தண்ணீரை நாள் முழுவதும் தேன் கலந்தோ அல்லது கலக்காமலோ பருகிவரலாம். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகவேண்டும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சையும் சேர்ந்து நீங்கள் இயற்கை முறையில் எடையை இழக்க உதவும். உடற்பயிற்சியோடு இந்த பானத்தை நீங்கள் தொடர்ந்து பருகி வரும்போது, உங்கள் தொப்பை குறைவதற்கான மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்