Fitness Tips : உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டுமா? ஜிம் எதற்கு? வீட்டிலிருந்தே டிரிம் ஆகலாம்! இதோ வழிகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fitness Tips : உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டுமா? ஜிம் எதற்கு? வீட்டிலிருந்தே டிரிம் ஆகலாம்! இதோ வழிகள்!

Fitness Tips : உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டுமா? ஜிம் எதற்கு? வீட்டிலிருந்தே டிரிம் ஆகலாம்! இதோ வழிகள்!

Priyadarshini R HT Tamil
Jan 14, 2024 04:04 PM IST

Fitness Tips : ஜிம் செல்லாமலே உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Fitness Tips : உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டுமா? ஜிம் எதற்கு? வீட்டிலிருந்தே டிரிம் ஆகலாம்! இதோ வழிகள்!
Fitness Tips : உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டுமா? ஜிம் எதற்கு? வீட்டிலிருந்தே டிரிம் ஆகலாம்! இதோ வழிகள்!

இயங்கிக்கொண்டே இருங்கள்

ஃபிட்டானவர்கள், தினமும் இயங்கிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் அன்றாட வாழ்வை அதற்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்வார்கள். நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது, பைக்குக்கு பதில் சைக்கிள் பயன்படுத்துவது என அவர்கள் ஏதேனும் ஒரு பயிற்சியில் அன்றாடம் ஈடுபடுவார்கள். அவர்கள் லிஃப்ட் பயன்படுத்த மாட்டார்கள். மாடிகளுக்குச் செல்வதற்கு படிகட்டுக்களை பயன்படுத்துவார்கள். இது அவர்களின் தசைகள் இயங்குவதை உறுதிப்படுத்துகிறது.

உறக்கத்தின் சக்தி

ஒரு ஆரோக்கியமான வாழ்வுக்கு தரமான தூக்கம் மிகவும் அவசியம். எனவே வழக்கமான உறக்கம், உறங்கச்செல்லும் நேரம் மற்றும் எழுந்திக்கும் நேரம் ஆகியவற்றை சரியாக செய்துவிடவேண்டும். அதிகம் சாப்பிடக்கூடாது. காபி தொடர்பான பொருட்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. தூக்கம் வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு முன் திரை நேரத்தை குறைக்க வேண்டும். திரை நேரத்தை சுத்தமாகவே குறைக்க வேண்டும்.

உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது

உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தான் வாழ்வு என்ற மந்திரத்தை நினைவில்கொள்ள வேண்டும். எனவே உடலை போதிய நீரேற்றத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியம். ஆல்கஹால், சர்க்கரை மற்றும் வாயு நிறைந்த பானங்கள் ஆகியவற்றை தவிர்த்து, நல்ல பழச்சாறுகள், நல்ல தண்ணீர், மிதமான சூடான தண்ணீர் என அனைத்தையும்தான் மாறிமாறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகள்

உங்கள் வீட்டையே உங்களின் ஃபிட்னஸ் இடமாக மாற்றிவிடுங்கள். யோகா மேட் வைத்துக்கொண்டு, உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு பர்னிச்சரை துணைக்கு வைத்துக்கொண்டு சிறிய யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து பழகுங்கள். எண்ணிலடங்கா ஆன்லைன் வீடியோக்கள் மற்றும் வழிகாட்டி புத்தகங்கள் பல்வேறு ஃபிட்னஸ் நுட்பங்களை வழங்குகின்றன. இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன், உடல் சமநிலை, நெகிழ்தன்மை மற்றும் ஒரு பழக்கவழக்கத்தையும் வழங்குகிறது.

கச்சிதமாக சாப்பிடுங்கள்

சரிவிகித உணவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் 5 முதல் 7 நிறங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் எடுத்துக்கொள்வது அவசியம். ஆரோக்கியமான கொழுப்பையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேணடும். துரித உணவுகள், குப்பை உணவுகள், அதிக சர்க்கரை ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சியை உங்களுக்கு பிடித்த வகையில் செய்துகொள்ளுங்கள்

நீங்கள் ஃபிட்டாக வைத்துக்கொள்வதையும், உங்களுக்கு பிடித்த விளையாட்டு அல்லது பழக்கங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் மகிழ்ந்திருக்கும் நடவடிக்கைகளுடன் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அது ஒரு விளையாட்டாக இருக்கலாம் அல்லது ஒரு நடனமாக இருக்கலாம். உடற்பயிற்சியே விளையாட்டானால், அது உங்கள் வாழ்வில் ஒரு நிலையான பழக்கத்தை ஏற்படுத்தும்.

பணியின் இடையில் வேலை

மேஜையில் அமர்ந்துகொண்டே வேலை செய்பவர்கள் உங்கள் பணி நாளில், உங்கள் வேலையுடனே உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை தூக்குவது, சேரில் அமர்ந்தபடி செய்யும் உடற்பயிற்சிகள், உட்கார்ந்துகொண்டே சைக்கிள் ஓட்டுவது என பல்வேறு பயிற்சிகளை செய்யலாம். உங்கள் தசைகள் இதனால் பலன்பெறும். மதிய உணவு இடைவேளையின்போது ஒரு சிறிய உடற்பயிற்சியை விரைவாக செய்து முடிக்கலாம்.

வெளியில் சென்று உடற்பயிற்சிகள்

வீட்டுக்குள் இருந்து செய்யும் டிரட் மில் பயிற்சிகளை விட்டுவிடுங்கள். வெளியில் சென்று நடை பயிற்சி செய்யுங்கள். ஓட்டம், பார்க் அல்லது மைதானத்தில் நடப்பது ஆகியவை உங்கள் உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்கும். நீங்கள் தரையில் நடப்பதால் உங்கள் பாதங்கள் வலுப்பெறுகின்றன. உங்கள் பாதங்கள் தனிதன்மையான வகையில் வலுப்பெறுகிறது.

தாய்ச்சி பயிற்சி மற்றும் தியானம்

தாய்ச்சி அல்லது தியானம் போன்றவற்றை செய்து பழகலாம். இது உங்கள் உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இதுபோன்ற உடற்பயிற்சிகள் உங்கள் உடல் மட்டுமின்றி, மனதுக்கும் உற்சாகம் அளிக்கக்கூடியவை. மனஅழுத்ததை குறைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.