தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Fish Gravy Can We Celebrate The Fight How To Make Delicious Anchovy Fish Curry

Fish Gravy : சண்டேவை கொண்டாடலாமா? ருசியான நெத்திலி மீன் குழம்பு செய்யவது எப்படி?

Priyadarshini R HT Tamil
Feb 04, 2024 10:42 AM IST

Fish Gravy : சண்டேயை கொண்டாடலாமா? ருசியான நெத்திலி மீன் குழம்பு செய்யவது எப்படி?

Fish Gravy : சண்டேவை கொண்டாடலாமா? ருசியான நெத்திலி மீன் குழம்பு செய்யவது எப்படி?
Fish Gravy : சண்டேவை கொண்டாடலாமா? ருசியான நெத்திலி மீன் குழம்பு செய்யவது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தேங்காய் – அரை கப் (துருவியது)

சீரகம் – அரை ஸ்பூன்

குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - கழுவி சுத்தம் செய்தது அரை கிலோ

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 3 ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

புளிக்கரைசல் – அரை கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தது ஒரு மண் சட்டியில் தேங்காய் எண்ணையை சூடேற்றிய பின்னர், கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

இந்த கலவையில் புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் மசாலா விழுது, கறிவேப்பிலை சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவேண்டும்.

குழம்பு கொதித்தவுடன் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி மீனை சேர்க்க வேண்டும்.

நெத்திலி மீனை கரண்டியை வைத்து கிளறாமல் மண் சட்டியை மெதுவாக தூக்கி அசைத்து கலக்கவேண்டும். அப்போதுதான் மீன் உடையாமல் இருக்கும்.

மேலும் ஐந்து நிமிடத்திற்கு மீன் குழம்பை மூடி கொதிக்க விடவேண்டும்.

சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.

இந்த நெத்திலி மீன் குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

பொதுவாகவே எந்த வகை மீன் குழம்பாக இருந்தாலும், அதை சாப்பிடுவதற்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத்துக்கு முன்னர் தயாரிக்க வேண்டும்.

எனவே மதியம் சாப்பிடுவதற்கு காலையிலேயே குழம்பை தயாரிக்க வேணடும். பொதுவாக மீன் குழம்பை மண்சட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான் அது சுவை நிறைந்ததாக இருக்கும்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மீன் இந்த உலகிலேயே மிகச்சிறந்த உணவாக உள்ளது.

மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.

மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்டலையில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

உலகில் இளம் வயது மரணத்துக்கு பெரும்பாலான காரணமாக இருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள். மீன் இதயத்துக்கு இதமான உணவாக உள்ளது.

உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை போக்க மீன்கள் உதவுகின்றன. இது மன நிலை, மன சோர்வு, குறைவான பலம் மற்றும் வாழ்வில் ஆர்வமின்மை ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மீன்களில் இருந்து அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. மீன் எண்ணெய்களிலும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்