Basic Fish Fry : மொறு மொறுன்னு இப்டி செய்ங்க மீன் வறுவல்! பக்கவாதம், மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது!
Fish Fry : மொறு மொறுன்னு இப்டி செய்ங்க மீன் வறுவல்! பக்கவாதம், மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது!
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் – அரை கிலோ
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகுத் தூள் – அரை ஸ்பூன்
பூண்டு தூள் – அரை ஸ்பூன்
(இதற்கு பதில் இஞ்சி-பூண்டு விழுது பயன்படுத்தலாம்)
கறிவேப்பிலை – 1 கொத்து
எலுமிச்சை – ஒரு ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
மீன் துண்டுகளை நன்றாக அலச வேண்டும்.
மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பூண்டு தூள் அல்லது இஞ்சி-பூண்டு விழுது என அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
அதனுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்டாக்கிக்கொள்ள வேண்டும்.
இதை மீன் துண்டுகளில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் வறுத்து எடுக்கலாம்.
கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் பொரித்தும் எடுக்கலாம். உங்களுக்கு எது பிடிக்குமோ அதுபோல் செய்துகொள்ளலாம்.
இதை எந்த சாதத்துடனும் பரிமாறலாம் அல்லது ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம்.
இதை கிரில் பேனில் வைத்து கிரில் செய்து சாலட் மற்றும் பிரட்டுடன் பரிமாறலாம். இதை பிரஞ்சாக எடுத்துக்கொள்ளலாம்.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மீன் இந்த உலகிலேயே மிகச்சிறந்த உணவாக உள்ளது.
மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.
மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்ட மீன்களில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உலகில் இளம் வயது மரணத்துக்கு பெரும்பாலான காரணமாக இருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள். மீன் இதயத்துக்கு இதமான உணவாக உள்ளது.
உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை போக்க மீன்கள் உதவுகின்றன. இது மன நிலை, மன சோர்வு, குறைவான பலம் மற்றும் வாழ்வில் ஆர்வமின்மை ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மீன்களில் இருந்து அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. மீன் எண்ணெய்களிலும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுக்கும் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
கிழங்கான் மீன்களில் கருப்பு கிழங்கான், வெள்ளை கிழங்கான் என இரண்டு வகை மீன்கள் உள்ளன. கிழங்கான் மீனை சாப்பிடுவதால் மூல நோய் பிரச்னைகள் குணமாகவும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கான் மீனை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்