தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  First Date How To Attract Your Boyfriend Or Girlfriend On The First Date

First Date : முதல் டேட்டிங்கிலே உங்கள் காதலன் அல்லது காதலியை கவர்ந்து இழுப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jan 21, 2024 01:13 PM IST

First Date : முதல் டேட்டிங்கிலே உங்கள் காதலன் அல்லது காதலியை கவர்ந்து இழுப்பது எப்படி?

First Date : முதல் டேட்டிங்கிலே உங்கள் காதலன் அல்லது காதலியை கவர்ந்து இழுப்பது எப்படி?
First Date : முதல் டேட்டிங்கிலே உங்கள் காதலன் அல்லது காதலியை கவர்ந்து இழுப்பது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

சரியான உடையணிந்துகொள்ளுங்கள்

உங்களுக்கு சௌகர்யத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் உடைகளை அணிந்துகொள்ளுங்கள். எந்த இடத்திற்கு டேட்டிங் செல்கிறீர்கள் என்பதற்கு ஏற்றவாறும் உங்கள் உடை இருக்க வேண்டும். நீங்கள் சரியான உடையை அணிந்துகொள்வது, உங்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது.

சரியான நேரத்திற்கு சென்றுவிடுங்கள்

சரியான நேரத்திற்கு நீங்கள் அந்த இடத்திற்கு சென்றடைவது மரியாதையை காட்டுகிறது. மற்றவர்களின் நேரத்தையும் மதிக்கிறீர்கள், உங்கள் நேரத்தையும் மதிக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த அணுகுமுறை உங்கள் டேட்டிங்குக்கு ஒரு நேர்மறையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நம்பத்தன்மையையும் இது சுட்டிக்காட்டுகிறது.

நேர்மையான ஆர்வத்தை காட்டுங்கள்

திறந்த மனதுடன் கேள்விகளை கேளுங்கள். உங்கள் காதலன் அல்லது காதலி கூறும் பதில்களை ஆர்வத்துடன் முழுமையாக கவனியுங்கள். நேர்மையான ஆர்வத்தை காட்டுங்கள். 

அவர்கள் வாழ்க்கை, அனுபவம், கருத்து குறித்த உங்கள் அக்கறையை காட்டுங்கள். இது நீங்கள் அவர்கள் குறித்து முழுமையாக அதாவது, அவர்களுக்கு தெரிந்த விவரங்களை விட கூடுதலாக தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது.

நல்ல உரையாடல் மேற்கொள்ள வேண்டும்

நேர்மறையான மற்றும் ஆர்வமான உரையாடலை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற, சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளை தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக முதல் டேட்டிங்கிலே சர்ச்சைக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள். 

மகிழ்ச்சி தரக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களை பேசுங்கள். இருவருக்கும் பொதுவான ஆர்வங்கள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். கலகலப்பாக பேசுங்கள். மற்றவர் என்ன பேசினால் சௌகர்யமாக உணர்கிறார் என்பதை கவனித்து அதை செய்யுங்கள்.

உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள்

நல்ல நடத்தைதான் உங்கள் உறவை நீண்ட தூரம் அழைத்துச்செல்லும். எனவே அமைதியாக இருங்கள், மரியாதையான மொழியை பயன்படுத்துங்கள். நல்ல மேஜை நாகரீகத்தை கடைபிடியுங்கள். 

நீங்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும்போது மேஜை நாகரீகம் மிகவும் அவசியம். ஒரு நாற்காலியை அவர்கள் அமர்வதற்காக இழுத்துப்போடுவது, கதவை திறந்துவிடுவது போன்றவை அவர்களுக்கு உங்கள் மீது நேர்மறையான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். என ஜெட்டிலாக நடந்துகொள்ளுங்கள்.

நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்

உங்களின் செயல்களில் நம்பிக்கை தெரிந்தால், அது மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். அதை பணவு சேர்த்து சமமாக கொடுங்கள். கண்களை பார்த்து பேசுங்கள். புன்னகையுடன் இருங்கள். நேர்மறையான அனுபவமாக அது அமையட்டும். கடுமையாகவோ அல்லது அதிகமான உங்களை அவமதித்தோ நடந்துகொள்ளாதீர்கள்.

நீங்களாக இருங்கள்

நம்பத்தன்மை மிகவும் அவசியம். நேர்மையாகவும் உங்களுக்கு உண்மையாகவும் இருப்பது அவசியம். உங்கள் டேட்டிங்கில் உண்மையான நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்துங்கள். நீங்கள் அங்கு சென்று நடித்தால் உங்களுக்கு அர்த்தமுள்ள ஒரு தொடர்பு ஏற்படாது.

ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்ளுங்கள்

பாராட்டு, ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தும். அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். நேர்மையுடனும், குறிபிட்ட பாராட்டுக்களையும் வழங்குங்கள். வழக்கமான அல்லது பொதுவான பாராட்டுகளாக அவை இல்லாமல் இருப்பது நல்லது.

ஆச்சர்யங்கள் கொடுங்கள்

உங்கள் செயல்கள் சிந்தனை நிறைந்ததாகவும், அவர்களின் நலன்களை அடக்கியதாகவும் இருக்கட்டும். இதற்கு ஒரே மாதிரியான ஆர்வம் இருக்க வேண்டும். ஒரு அழகான சிறிய பரிசுப்பொருட்களை எடுத்து வாருங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆச்சர்யத்தை கொடுக்க முயற்சி செய்யுங்கள். அது உங்கள் முதல் டேட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.

தொடர்பில் இருங்கள்

இப்படி ஒரு நபரை நீங்கள் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை நேர்மையாக வெளிப்படுத்துங்கள். அது உங்களுக்கு உண்மையிலே அவர்களை பிடித்திருந்தால் மட்டும் இந்த உணர்வை வெளிப்படுத்துங்கள். 

உங்கள் டேட்டிங் முடிந்து சென்றவுடன், ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள். உங்களுடனான இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. அதற்கு நன்றி என்று கூறுங்கள். எதிர்காலத்தில் சந்திக்க விரும்பினால் அதையும் வெளிப்படுத்துங்கள். இந்த உறவு நீண்ட நாள் செல்லும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்