உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Jun 07, 2025 03:00 PM IST

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

ஆழ்ந்த உறக்கமின்மை

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க ஆழ்ந்த உறக்கம் மிகவும் தேவையான ஒன்று. உங்கள் உடல் சைட்டோகைன்கள் மற்றும் புரதங்களை தயாரித்து உங்கள் உடலில் ஏற்படும் தொற்றுக்களை அடித்து விரட்டுகிறது. உங்களுக்கு போதிய அளவு உறக்கம் இல்லாவிட்டால், அது சைட்டோகைன்களின் உற்பத்தியை பாதிக்கிறது இது குறைவாக சுரக்கும்போது உங்களுக்கு எண்ணற்ற தொற்றுகள் ஏற்படுகின்றன. அவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்து போராடுகிறது. செல்களின் இழப்பை தடுக்கிறது.

ஆற்றல் குறைவு

உங்கள் உடலில் அன்றாட உடற்பயிற்சிகள், நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு ஊக்கம் அளிக்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டல செல்கள் உடல் முழுவதும் பயனிக்கச் செய்கிறது. இதனால் உங்கள் உடலில் நோய் எந்த பாகத்திலும் ஏற்படாமல் காக்கிறது. ஆனால் உட்கார்ந்த இடத்திலேயே இயங்கும் வாழ்க்கை முறை உங்கள் உடலில் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுததுகிறது. இதனால் உங்களின் நோய் எதிர்ப்பாற்றல் குறைக்கிறது.

அதிக மனஅழுத்தம்

நாள்பட்ட மனஅழுத்தம் உங்கள் உடலில் அதிகளவில் கார்டிசால் சுரக்க வழிவகை செய்கிறது. அது உங்கள் உடலில் தொடர்ந்து அதிகம் இருக்கும்போது, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை இயங்கவிடாமல் தடுக்கிறது. அதிகளவில் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும்போது, உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் மோசமடைகிறது. இதனால் உங்கள் உடல் தொற்றுகளுக்கு ஆளாகிறது.

ஆரோக்கியமற்ற உணவுகள்

உங்கள் உணவில் கொழுப்புகள், குறிப்பாக சாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் இருந்தால், அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. உங்கள் உணவில் அதிகளவில் கொழுப்பு இருந்தால், அது உங்களுக்கு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் நோயை எதிர்த்து போராடும் திறனை குறைக்கிறது. காய்கறிகள், பழங்கள் குறைவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கமால் போகிறது. இதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை கிடைக்காமல் போகிறது.

அதிகளவில் ஆன்டிபயோடிக்குகள் பயன்படுத்துவது

உங்களுக்கு ஏற்படும் வைரல் மற்றும் பாக்டீரியல் தொற்றுகளுக்கு அதிகளவில் நீங்கள் ஆன்டிபயோடிக்குகள் பயன்படுத்தினால், அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மோசமடையச் செய்கிறது. இது ஆன்டிபயோடிக் எதிர்ப்புக்கும் உதவுகிறது. அடிக்கடி ஆன்டிபயோடிக்குகள் பயன்படுத்தும்போது, அது உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்க்கரை அதிகம் உட்கொள்வது

உங்களுக்கு நாள்பட்ட வீக்கம் அல்லது நோய் எதிர்ப்பு மண்டல பிரச்னைகள் இருந்தால் அதற்கு காரணம் நீங்கள் அதிகளவில் சர்க்கரை உட்கொள்வதும் ஆகும். சர்க்கரை உங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புரதச்சத்துக்களை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை பாதிக்கப்படுவதுடன், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறது.

வைட்டமின் டி குறைபாடு

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால், உங்களுக்கு தொற்றுகள் அதிகளவில் ஏற்படுகிறது. பலருக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கு அவர்கள் வெளியே வெயிலில் அதிகளவில் சுற்றாமல் இருப்பது காரணமாகிறது. காலை இளம் வெயிலில் சிறிது நேரம் இருப்பது சருமம் வைட்டமின் டியை உறிஞ்ச உதவும்.

சுகாதாரமற்ற செயல்கள்

முறையான சுகாதாரம் இல்லாவிட்டால் இது உங்கள் உடலில் தொற்றுக்களை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இது உங்கள் உடலில் நோய்கிருமிகள் எளிதாக செல்ல வழிவகுக்கும். அவையும் உள்ளே சென்று உங்களுக்கு தொற்றுக்களை அதிகரிக்கும். கைகழுவ மறப்பது, குறிப்பாக சாப்பிடச் செல்லும் முன் கைகளை நன்றாக கழுவாமல் இருப்பது, பாத்ரூம் சென்று வந்த பின்னர் கைகளை சோப்பு போட்டு கழுவாமல் இருப்பது ஆகியவை சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள் ஆகும். இவை உங்கள் உடலில் ஆபத்தான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களைக் கொண்டுவந்து சேர்க்கும். இதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்.