Fibre Rich Food : நார்ச்சத்துள்ள உணவுகளை நாம் ஏன் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்? இதுதான் காரணம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fibre Rich Food : நார்ச்சத்துள்ள உணவுகளை நாம் ஏன் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்? இதுதான் காரணம்!

Fibre Rich Food : நார்ச்சத்துள்ள உணவுகளை நாம் ஏன் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்? இதுதான் காரணம்!

Priyadarshini R HT Tamil
Published Mar 14, 2024 07:00 AM IST

Fibre Rich Food : நீங்கள் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Fibre Rich Food : நார்ச்சத்துள்ள உணவுகளை நாம் ஏன் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்? இதுதான் காரணம்!
Fibre Rich Food : நார்ச்சத்துள்ள உணவுகளை நாம் ஏன் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்? இதுதான் காரணம்!

உடல் எடை குறைப்பு பயணத்தில் உங்களுக்கு ஊட்டம் கொடுங்கள்

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவு, உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் கொடுக்கிறது. அது உங்களுக்கு நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. கலோரிகளை குறைக்கவும் உதவுகிறது. பசி இல்லாவிட்டால் நீங்கள் அதிக உணவுகள் எடுத்துக்கொள்ள தேவையில்லை. இதனால் உங்கள் உடல் அதிக கலாரிகள் எடுப்பது தடுக்கப்படும். இதனால் உங்கள் உடல் எடை குறைப்பு சாத்தியமாகும்.

ஒல்லிபெல்லியாக வலம் வரலாம்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ளும்போது, உடல் எடை அதிகரிக்காது நீங்கள் ஒல்லிபெல்லியாக வலம் வரலாம். உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை எளிதாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் நார்ச்சத்துக்கள் கரைத்து வெளியேற்றிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோல் ஒல்லியான பின்னரும் அவர்கள் போதிய அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சேர்த்துக்கொள்ளும்போது, அவர்களின் உடல் எடையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

நீங்கள் நார்ச்சத்து எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரித்தால், டைப் 2 சர்க்கரை அளவு அதிகரிப்பது உயரும் ஆபத்து குறையும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் நார்ச்சத்துக்கள் கரையக்கூடியது மற்றும் கரையாதது என எதுவாக இருந்தாலும், அது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது அந்த நோய் அதிகமாவதை கட்டுப்படுத்துகிறது.

உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு எதிரான பாதுகாப்பு கவசத்தை நார்ச்சத்துக்கள் உடலுக்கு வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் உடலின் கொழுப்பு குறைக்கப்படுகிறது. அது உங்கள் தமனிகளை சுத்தமாக்குகிறது. உங்கள் அன்றாட உணவில் நீங்கள் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், அது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உங்கள் குடலை சுத்தப்படுத்துங்கள்

உங்கள் குடல் பல கோடி பாக்டீரியாக்களின் வீடு என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு நார்ச்சத்துக்கள் ஊட்டமளிக்கும் உரமாகிறது. நல்ல பாக்டீரியாக்ளின் வளர்ச்சியை ஊக்குவித்து, அது செரிமானத்துக்கு உதவுகிறது. எனவே உங்கள் குடலை பாதுகாக்க நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது

இதுகுறித்த ஆய்வுகள் நிறைய வேண்டும். எனினும், அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட, உணவு சில புற்றுநோய்களை தடுக்கும். உங்கள் உணவில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. தினமும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலுக்கு இந்த புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை எதிர்த்து போராடும் சக்தியைக் கொடுங்கள்.

நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்

நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வை வாழ்வதற்கு, நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியம். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்பவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

உடலை சுத்தப்படுத்தும்

நார்ச்சத்துக்கள் ஒரு துடைப்பம்போல் செயல்பட்டு, உங்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை ஒன்றுகூட்டி வெளியே தள்ளிவிடும். மலச்சிக்கலுக்கு விடை கொடுக்கும். வழக்கமான குடல் இயக்கத்துக்கு நார்ச்சத்துக்கள் உதவும். எனவே உங்கள் உணவில் கட்டாயம் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.