Weight Loss: உடல் எடை குறைய வேண்டுமா? - நடைப்பயிற்சியில் இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்!
நடைப்பயிற்சி முறையில் சில மாற்றங்களைச் செய்தால் விரைவில் உடல் எடை குறையும்.

உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகம் சேர்வது உடல் எடை அதிகரிப்பை உருவாக்கும். அதற்குப் பிறகு உடலில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படும். உடலில் சேரும் கொழுப்பைக் குறைப்பதற்கு நடைப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பல ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
வேகமாக நடப்பது
நடைப்பயிற்சி செய்யும் போது வேதத்தை அதிகரிப்பது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். நிதானமாக நடப்பதை விட வேகமாக நடப்பது உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகளைக் குறைக்கும் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஓட்டப்பந்தய வீரர்கள் உடல் எடை குறைவாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் வேகம்தான்.
உயரமான பகுதியில் நடப்பது
சமதளமான பரப்பில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகளைக் குறைக்கும். மலை பாங்கான பகுதிகளில் ட்ரெக்கிங் செய்யலாம். தாழ்வான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்குச் செல்லும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் எனக் கூறப்படுகிறது.