Festival Special Sweet : பண்டிகை கால இனிப்பு! இந்த பொங்கலுக்கு செஞ்சு அசத்துங்க! பாசி பருப்பு அல்வா!
Festival Special Sweet : பண்டிகை கால இனிப்பு! இந்த பொங்கலுக்கு செஞ்சு அசத்துங்க! பாசி பருப்பு அல்வா!

தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – ஒரு கப்
முந்திரி பருப்பு – அரை கப்
பாதாம் நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
பிஸ்தா நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
திராட்சை – ஒரு கைப்பிடி
ரவா – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
பால் – ஒரு கப்
சர்க்கலை – 2 கப்
ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
நெய் – தேவையான அளவு
செய்முறை –
பாசி பருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறவைத்த பருப்பை வடிகட்டி, அதை முழுமையாக உலர வைக்கவேண்டும்.
மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொரகொரப்பாக அரைக்கவேண்டும்.
ஒரு கடாயை எடுத்து நெய் சேர்க்க வேண்டும். முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தாவை வறுக்கவேண்டும்.
கடாயில் இருந்து அவற்றை அகற்றி, கடாயில் நெய் சேர்த்து திராட்சையை சேர்க்கவேண்டும். அவற்றை வறுக்கவேண்டும். வாணலியில் இருந்து அகற்றவேண்டும்.
ஒரு கடாயில், நெய் சேர்த்து, ரவா, கடலை மாவு சேர்த்து வறுக்கவேண்டும்.
அவற்றை 2 நிமிடங்கள் வறுக்கவேண்டும்.
அரைத்த பருப்பு கலவையைச் சேர்த்து கலக்கவேண்டும். 15 நிமிடங்கள் வறுக்கவேண்டும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து கலக்கவேண்டும். பால் சேர்த்து கலக்கவேண்டும்.
நெய் சேர்த்து கலக்கவேண்டும்.
அடுத்து சர்க்கரையைச் சேர்த்து முழுமையாகக் கரைய விடவேண்டும்.
மீண்டும் நெய் சேர்க்கவேண்டும்.
பருப்பு கலவை கெட்டியாக ஆரம்பித்தவுடன், ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கடைசியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சையை சேர்க்கவேண்டும். அவ்வளவுதான், சுவையான பாசி பருப்பு அல்வா ரெடி
இந்திய பாரம்பரிய அல்வா, கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்தது. இது விழாக்காலங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின்போது வீடுகளில் செய்யப்படும். இங்கு கொடுக்கப்பட்டுள்ளதுபோல் செய்தால், கடைகளில் இருப்பதுபோல் வரும். பாசிபருப்பே சுவை நிறைந்தது. அதில் இனிப்பு சேரும்போது கூடுதல் சுவையாக இருக்கும். எனவே இதை சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்தளவு சுவை நிறைந்ததாக இருக்கும்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

டாபிக்ஸ்