Fertility : ஃபெல்லோபியன் குழாயில் உள்ள அடைப்பா? கருத்தரிக்க முடியாமல் அவதி? இந்த ஒரு பானம் போதும்!-fertility blockage in fallopian tube suffering from not being able to conceive this one drink is enough - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fertility : ஃபெல்லோபியன் குழாயில் உள்ள அடைப்பா? கருத்தரிக்க முடியாமல் அவதி? இந்த ஒரு பானம் போதும்!

Fertility : ஃபெல்லோபியன் குழாயில் உள்ள அடைப்பா? கருத்தரிக்க முடியாமல் அவதி? இந்த ஒரு பானம் போதும்!

Priyadarshini R HT Tamil
Aug 20, 2024 10:47 AM IST

Fertility : ஃபெல்லோபியன் குழாயில் உள்ள அடைப்பா? கருத்தரிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால், இந்த ஒரு பானம் போதும். இதை எடுத்து பலன்பெறுங்கள்.

Fertility : ஃபெல்லோபியன் குழாயில் உள்ள அடைப்பா? கருத்தரிக்க முடியாமல் அவதி? இந்த ஒரு பானம் போதும்!
Fertility : ஃபெல்லோபியன் குழாயில் உள்ள அடைப்பா? கருத்தரிக்க முடியாமல் அவதி? இந்த ஒரு பானம் போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கருத்தரிப்பு

திருமணம் முடிந்தோ அல்லது குழந்தை வேண்டும் என்று எண்ணும்போதோ உடனே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதுதான் கருவுறாமை ஆகும். நீங்கள் எத்தனை முறை பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக்கொண்டாலும், உங்களால் கருத்தரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அதற்கு உரிய காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டும்.

நீங்கள் கருவுற முடியாமல் போவதற்கு, ஆரோக்கிய பிரச்னைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாகின்றன. ஆனால் பாதுகாப்பான பல சிகிச்சைகள் உங்களை கருவுறவைக்கும். இயற்கை முறையிலும் சில வழிகளை பின்பற்றினால் உங்களால் கருவுற முடியும்.

அறிகுறிகள்

கருவுறாமைக்கு தெளிவான அறிகுறிகள் கிடையாது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளால் பெண்களால் கருவுற முடியாமல் போகிறது. ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் கருவுற முடியாமல் போகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று அல்லது பெறாமல் என இரு முறைகளிலும் கருவுறுகிறார்கள்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

உங்களுக்கு கருவுறுதல் பிரச்னைகள் ஏற்பட்டால், ஓராண்டு வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னர்தான் மருத்துவரை அணுகவேண்டும்.

பெண்களுக்கு,

35 வயதை கடந்துவிட்டால்,

40 வயதை கடந்த பின்னர்,

மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டால், தாமதல் மற்றும் வலி போன்றவை,

கருவுறுதல் கோளாறுகள்,

ஒருமுறைக்கு மேல் கருச்சிதைவு

இடுப்பில் வீக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஆண்களுக்கு,

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்,

விறைப்புக் கோளாறுகள்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஹெர்னியா அறுவைசிகிச்சை செய்தவராக இருந்தால்,

உடன் பிறந்தவர்களுக்கு கருவுறுதல் கோளாறுகள் இருந்தால்,

திருமணம் முடிந்து நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டால், உடனே இந்த பானம் எடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இவைதான் உங்களின் கருமுட்டைகளையும், விந்தணுக்களையும் வீரியமாக்கக் கூடியவை ஆகும்.

பெரும்பாலான பெண்கள், ஃபெல்லோபியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் கருத்தரிக்க முடியாமல் போகிறது. இதுபோன்ற ஃபெல்லோபியன் குழாயில் அடைப்பு இருந்தால், இயற்கையாக கருத்தரிக்க முடியாது என்று சில பெண்கள் நினைக்கிறார்கள்.

அதனால் செயற்கை கருத்தரிப்பு முறையை பின்பற்ற முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த வீட்டுத்தீர்வை பின்பற்றினால் போதும். அந்த அடைப்பு குணமாகி இயற்கையாக கருத்தரிக்க முடியும். எனவே உங்களுக்கு பலன் உறுதியாகக் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

சோம்பு – ஒரு ஸ்பூன்

தண்ணீர் – 2 டம்ளர்

கருப்பட்டி – ஒரு ஸ்பூன் (பொடித்தது)

செய்முறை

சோம்பை நன்றாக வறுக்கவேண்டும். அதில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அது அரை டம்ளராகும் வரை கொதிக்கவிடவேண்டும். பின்னர் வடிகட்டி அதில் கருப்பட்டி சேர்த்து மாதவிடாயின் முதல் 5 நாட்கள் கட்டாயம் தவறாமல் பருகவேண்டும்.

இப்படி பருகும்போது, அது மாதவிடாயின் வலியைப்போக்குவதுடன், கருப்பை மற்றும் கருவுறுதலில் உள்ள பிரச்னைகளை சரிசெய்கிறது. இதுபோன்ற ஃபெல்லோபியன் குழாய் அடைப்புக்களை சரிசெய்து கருவுறுதல் பிரச்னைக்கு தீர்வு காண்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.