Fenugreek Serum: தலையில் பொடுகு பிரச்சனையா? பொடுகை குறைக்க வெந்தய சீரம் உதவலாம்! வீட்டிலேயே செய்யும் முறை!
Fenugreek Serum: கூந்தல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம். வீட்டிலேயே வெந்தய சீரம் தயாரிக்கவும். இதைப் பயன்படுத்துவதால் பல முடி பிரச்சினைகள் தீர்க்கப்படும். இது முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

தற்போது கிட்டத்தட்ட அனைவருமே முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு முடி உதிர்தல், வெள்ளையாக முடி போன்ற பிரச்சனைகள் இருக்கும். மற்றவர்களுக்கு பொடுகு அதிகமாக இருக்கும். இதற்கு, முடியை பாதுகாக்கும் வெந்தய சீரம் ஒரு நல்ல தீர்வாக செயல்படுகிறது. இதை உங்கள் தலைமுடியில் தடவுவது பல பிரச்சினைகளை தீர்க்கும். இதை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். எனவே வெந்தய சீரம் தயாரிப்பது எப்படி, அதன் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
முடி உதிர்வதைத் தடுப்பதில் வெந்தயம் மிகவும் பயனுள்ள இயற்கை தீர்வாக செயல்படுகிறது. இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வெந்தயம் கூந்தலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இது வேர்களிலிருந்து முடியை பலப்படுத்துகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதோ இதன் நன்மைகள்.
முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க வெந்தயத்தை தினமும் தடவி வந்தால் நல்ல தீர்வாகும். வெந்தயத்தில் உள்ள நிகோடினிக் அமிலம் முடிக்கு ஊட்டமளித்து மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. இது முடி வளர்ச்சியுடன் முடி உதிர்வதையும் குறைக்கிறது.
வெள்ளை முடி
வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் வெள்ளை முடி பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனையை குறைக்க, வெந்தய சீரத்தை தினமும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இது கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது. இது முடி வெள்ளையாக மாறுவதைத் தடுக்கிறது.
உலர்ந்த, சிக்கலான கூந்தல் உள்ளவர்கள் வெந்தய சீரத்தை அடிக்கடி தலைமுடியில் தெளிக்க வேண்டும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது கூந்தலில் வெந்தய பேஸ்டைப் பயன்படுத்த வேண்டும். இது முடி மென்மையாக பளபளப்பாக இருப்பதோடு, அடிக்கடி முடி உதிர்வதால் ஏற்படும் பிரச்சனையையும் தீர்க்கும்.
பொடுகு
சிலருக்கு அரிப்பு, பேன், பொடுகு போன்ற பிரச்சினைகள் இருக்கும். தலையில், வெந்தய சீரத்தை முடியின் அடிப்பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தை நன்கு சுத்தம் செய்ய உதவுகின்றன.
வெந்தய சீரம் செய்வது எப்படி?
- வெந்தய சீரம் தயாரிக்க, இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் அல்லது பாட்டிலில் வைக்கவும்.
- ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும்.
மற்றொரு முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெந்தயத்தை போடவும்.
- அடுப்பை பற்ற வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- நீரின் நிறம் மாறியதும், இந்த தண்ணீரை வடிகட்டவும்.
- அது குளிர்ந்த பிறகு அதை ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.
இந்த தண்ணீரை உங்கள் தலைமுடியில் தெளித்து, ஷாம்பு போடுவதற்கு முன் அல்லது ஷாம்புபோடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு உங்கள் தலைமுடியில் தேய்த்து விடுங்கள். கால் மணி நேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு அலசவும். இது நன்றாக வேலை செய்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்