Tamil News  /  Lifestyle  /  Fenugreek Lunch Box Rice This Rice Is Soothing To The Stomach Best Lunch Box Recipe

Fenugreek Lunch Box Rice : வயிற்றுக்கு இதமளிக்கும் இந்த சாதம்! சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jan 27, 2024 03:24 PM IST

Fenugreek Lunch Box Rice : வயிற்றுக்கு இதமளிக்கும் இந்த சாதம்! சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

Fenugreek Lunch Box Rice : வயிற்றுக்கு இதமளிக்கும் இந்த சாதம்! சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!
Fenugreek Lunch Box Rice : வயிற்றுக்கு இதமளிக்கும் இந்த சாதம்! சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! (Home Cook'd)

ட்ரெண்டிங் செய்திகள்

சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

கரம் மசாலா – கால் ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

பொடிக்க தேவையான பொருட்கள்

பூண்டு – 1

சீரகம் – அரை ஸ்பூன்

வெந்தயம் – 1 ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – கால் ஸ்பூன்

ஓமம் – 2 சிட்டிகை

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தண்ணீரை வடித்துவிட்டு, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன உரலில் மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஓமம் சேர்த்து முதலில் நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் பூண்டை சேர்த்து நன்றாக தட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடித்தவுடன், இடித்த பச்சை மிளகாய் கலவையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்க வேண்டும்.

அதில் தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் அரிசியை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். பாத்திரத்தில எதுவும் ஒட்டவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு குக்கரை மூடவேண்டும்.

தண்ணீரை சேர்த்து, நன்றாக கலந்துவிட வேண்டும். குக்கரில் 2 விசில் விடவேண்டும் அல்லது நீங்கள் வழக்கமாக எத்தனை விசில் விடுவீர்களோ அத்தனை விசில் விட்டுக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சத்தான மற்றும் சுவையான வெந்தய சாதம் தயார்.

வெந்தயத்தின் நன்மைகள்

இதயத்துக்கு நல்லது. இரும்புச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ளாவிட்டால், இதயநோய் பாதிப்புக்கள் ஏற்படும். நாள்பட்ட இதய செயலிழப்பை ஏற்படுத்திவிடும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கொழுப்பை குறைக்க உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. அழற்சியை குறைக்கிறது. வெந்தயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட அதிக அழற்சிக்கு எதிராக போராடுகிறது. இதில் உள்ள பாலிஃபினால்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட் எனப்படும் தாவர உட்பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நினைவாற்றல் இழப்பை தடுக்க உதவுகிறது. அதற்கு வெந்தயத்தை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. மெக்னீசியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வயிற்றுப்பிரச்னைகளை சீராக்க உதவுகிறது.

இரும்புச்சத்து வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதை நார்ச்சத்து சரிசெகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. அதிகம் எடுத்துக்கொள்ளும் சளி, இருமல் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே அளவாக எடுத்துக்கொண்டு உடல் நலன் பேணுவது சிறப்பு.

WhatsApp channel

டாபிக்ஸ்