எண்ண முடியாத அளவு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்ட வெந்தயக்கீரை! உணவில் சேர்ப்பது எப்படி?
எண்ண முடியாத அளவு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்ட வெந்தயக்கீரையை உணவில் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெந்தயக்கீரை, இந்தியில் மேத்தி என்று அழைக்கப்படுகிறது. மத்திய தரைக்கடல், மேற்கு ஆசிய உணவுகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. செரிமானம், இன்சுலின், இதயத்துக்கு இதமானது, வீக்கத்துக்கு எதிரானது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. குளிர் காலங்களில் உடலை சூடாக வைத்துக்கொள்ளும். இப்போது துவங்கியுள்ள குளிருக்கு இதமாக உங்கள உணவில் அடிக்கடி வெந்தயக்கீரையை சேர்த்துக்கொள்ளலாம். இதை கோதுமை மாவுடன் பிசைந்து சப்பாத்தி செய்யமுடியும். இதை உலர்த்தி கசூரி மேத்தி தயாரிக்கப்படுகிறது. அதை நீங்கள் அனைத்து கறி, பொரியல்களிலும் தூவிக்கொள்ளலாம். வாசமாகவும் இருக்கும். உங்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கும். உங்களுக்கு குளிர்க் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளைப் போக்கும்.
வெந்தயக்கீரையின் நன்மைகள்
குளிருக்கு இதமான தோற்றம்
வெந்தயக்கீரை லேசாக கசக்கும். இதை நீங்கள் குளிர் காலத்தில் உங்கள் உடலை இதமாக வைத்துக்கொள்ள பயன்படுத்தலாம். மேத்தி பராத்தா, லட்டுககள் உங்கள் உடலுக்கு சூட்டைக் கொடுப்பவையாகும். குளிர் காலத்தில் இவற்றை உட்கொள்ளவேண்டும். சுவை மட்டுமல்ல, உங்கள் உடலுக்கு இதமான வெப்பத்தையும் கொடுக்கும் தன்மை கொண்டவையாகும்.
செரிமானம்
செரிமானமின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றைத் தடுக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள்தான் அதற்கு காரணம். நார்ச்சத்துக்கள் உங்கள் குடல் நன்றாக இயங்க உதவுகிறது. உங்களுக்கு அசவுகர்யங்கள் இருந்தால், மழையில் உங்களுக்கு செரிமானம் சரியாக நடக்காவிட்டால், அதை வெந்தயக்கீரை சரியாக்கும். செரிமானமின்மையால் ஏற்படும் அத்தனை கோளாறுகளையும் எளிதில் குறைத்துவிடும்.